மருதமுனை அல் ஹம்றாவின் மாணவி சுஹைப்தீன் பாத்திமா அனீகா குர்ஆன் ஓதல் போட்டியில் தங்கம் வென்றார்
கடந்த 01/11/2025 ஆம் திகதியன்று கொழும்பு ஸாஹிரா கல்லூரியில் நடைபெற்ற தேசிய மட்ட முஸ்லிம் கலாச்சாரப் போட்டி நிகழ்ச்சியில் கனிஷ்ட பிரிவிற்கான குர்ஆன் ஓதல் (qirath recitation) போட்டியில் மருதமுனை கமு/அல்-ஹம்றா வித்தியாலயத்தில் தரம் 08ல் கல்வி பயிலும் மாணவி சுஹைப்தீன் பாத்திமா அனீகா முதலாம் இடத்தைப்பெற்று தங்கப்பதக்கத்தைப்பெற்று பாடசாலைக்கும், பிரதேசத்திற்கும், மாகாணத்திற்கும் பெருமைசேர்த்துள்ளார்.
அவரை பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், சகமாணவர்களும் வாழ்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றனர். அவர் வைத்தியர் P. M. சுஹைப்தீன் மற்றும் A.S. பாத்திமா பஸ்மி ஆசிரியை ஆகியோரின் புதல்வியாவார்.
இவ்வருடம் நடைபெற்ற வலையமட்டப் போட்டியிலும், மாகாணமட்டப் போட்டியிலும் முதலிடம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரை நன்கு பயிற்றுவித்த பாடசாலை இஸ்லாம் பாட ஆசிரியை எம். ஐ. எப் ஹிபாயா மற்றும் சகோதரி ஷிபாயா ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பதுடன் இவர் மருதமுனை மத்ரசதுல் தாருல் ஹனான் ஹிப்லு மத்ரசாவின் மாணவியுமாவார்.
