பல்துறைகளில் GOPIO அமைப்பு ஆற்றிவரும் பணிகளை மனதாரப் பாராட்டுகிறேன்..! – வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத்
இலங்கையில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பான GOPIO ஸ்ரீலங்காவின் வெள்ளி விழாக் கொண்டாட்டத்தில் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
அவர் அங்கு உரையாற்றுகையில், “கடந்த 25 ஆண்டுகளாக, கல்வி, தலைமைத்துவம், புத்தாக்கம், மற்றும் தொழில்முனைவு போன்ற பல துறைகளில் இந்த GOPIO அமைப்பு ஆற்றிவரும் பணிகளை நான் மனதாரப் பாராட்டுகிறேன்.” என தெரிவித்தார்.
இந்த நிகழ்வில், இலங்கையில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கல்வியாளர்கள், புத்திஜீவிகள், வர்த்தகத் பிரமுகர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் உட்பட, பல்வேறு நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் GOPIO உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
