கொலன்னாவயில் இடம்பெற்ற இராஜதந்திர அலுவலகங்களுக்கு இடையிலான Diplomatic Tournament இன் இறுதிப் போட்டிகள்..!
கொழும்பிலுள்ள இராஜதந்திர அலுவலகங்களுக்கு இடையிலான Diplomatic Tournament இன் இறுதிப் போட்டிகள் (02) ஞாயிற்றுக்கிழமை கொலன்னாவயில் இடம்பெற்றது.
இதில் கிரிக்கெட் தொடரில் இந்திய உயர் ஸ்தானிகராலய அணியும், கால்பந்தாட்ட தொடரில் சவூதி அரேபிய தூதுவராலய அணியும் வெற்றி பெற்றது.
இதேவேளை, கிரிக்கெட் தொடர்பில் ஐக்கிய நாடுகள் அலுவலக அணி இரண்டாம் இடத்தினையும் கால்பந்தாட்ட தொடர்பில் இந்திய உயர் ஸ்தானிகராலய அணி இரண்டாம் இடத்தினையும் பெற்றன.
