ஸாஹிராக் கல்லூரியில் முஸ்லிம் கலாசாரப் போட்டி நிகழ்வுகள்
கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் முஸ்லிம் பாடசாலைகள் அபிவிருத்திக் கிளை அனுசரணையில் “அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான முஸ்லிம் கலாசாரப் போட்டி – 2025” தேசிய மட்டப் போட்டிகள், கொழும்பு – மருதானை, ஸாஹிராக் கல்லூரியில், நேற்று (01) சனிக்கிழமை ஆரம்பமானதுடன், இன்று (02) ஞாயிற்றுக்கிழமையன்றும் நடைபெறுகின்றன.
நாட்டின் பல பாகங்களிலிருந்தும் இக்கலாசாரப் போட்டி நிகழ்வுகளில், மாணவ மாணவிகள் கனிஷ்ட மற்றும் சிரேஷ்ட பிரிவுகளாகக் கலந்து கொண்டு, தனித்தனியாகவும் குழுவினராகவும் தமது திறமைகளை வெளிப்படுத்தினர்.
கலாசாரப் போட்டி நிகழ்வுகளின் ஆரம்ப நாள் அறிவுறுத்தல் வைபவம், நேற்று (01) ஸாஹிராக் கல்லூரி கபூர் மண்டபத்தில் நடைபெற்றது.
கல்வி அமைச்சின் முஸ்லிம் பாடசாலைகள் அபிவிருத்திக் கிளையின் பணிப்பாளர் மேஜர் என்.ரீ. நஸுமுதீன் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக கல்வி அமைச்சின் பாடசாலை விவகார மேலதிக செயலாளர் பீ.ஆர். காரியவசம் மற்றும் சிரேஷ்ட உதவிச் செயலாளர் எம்.எப். கமருன் நிஸா, ஸாஹிராக் கல்லூரி அதிபர் றிஸ்வி மரிக்கார் உள்ளிட்ட கல்வி அமைச்சு மற்றும் கல்வி சார் உயர் அதிகாரிகள் பலரும் பங்கேற்றிருந்தனர்.







( ஐ. ஏ. காதிர் கான் )
