பேருவளை பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த சாஹித்திய விழாவில் சிறேஷ்ட ஊடகவியலாளர் பீ.எம்.முக்தார் கௌரவிப்பு
பேருவளை பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த சாஹித்திய விழா பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் ஜானக பெரேராவின் தலைமையில் நடைபெற்றது.
எழுத்தாளர்கள்,கலைஞர்கள், கவிஞர்கள், ஊடகவியலாளர்கள் பலரும் நிகழ்வில் கௌரவிக்கப்பட்டார்கள்.
சிரேஷ்ட ஊடகவியலாளர் (லேக் ஹவுஸ்) பீ.எம் முக்தார் ஹாஜியார் அவர்களின் 43 வருட ஊடகப் பணிகளை பாராட்டி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.மேலும் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக ஊடக பணி மேற்கொண்டு வரும் ஊடகவியலாளர்களான துஸித குமார டி .ஸில்வா,சுமித் கருணா ரத்ன ஆகியோரும் இங்கு கௌரவிக்கப்பட்டன.
சாஹித்திய விழா போட்டிகளில் வெற்றி பெற்ற பாடசாலை மாணவர்களின் பல்வேறு காலை,கலாசார நிகழ்ச்சிகளும் இங்கு இடம் பெற்றதுடன் பரிசில்களும் வழங்கப்பட்டது.



(படங்கள் பேருவளை நிருபர்)
