உள்நாடு

ஜப்பான் கப்பலான AKEBONO தனது பயணத்தை முடித்துக்கொண்டு இலங்கையிலிருந்து புறப்பட்டது

ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படைக் கப்பலான AKEBONO தனது உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு வெள்ளிக்கிழமை (31) இலங்கையை விட்டுப் புறப்பட்டது.

கொழும்பு துறைமுகத்தில் இலங்கை கடற்படையினரால் இந்தக் கப்பலுக்கு பாரம்பரிய கடற்படை முறைப்படி பிரியாவிடை வழங்கப்பட்டது. இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, AKEBONO இன் கட்டளை அதிகாரி கமாண்டர் ARAI Katsutomo மற்றும் மேற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் ஜகத் குமார ஆகியோருக்கு இடையே கப்பலில் ஒரு உத்தியோகபூர்வ சந்திப்பு நடைபெற்றது.

AKEBONO இலங்கையில் தங்கியிருந்த காலத்தில், இரு நாடுகளின் கடற்படைகளுக்கு இடையே நல்லெண்ணத்தை மேம்படுத்துவதற்காக இலங்கை கடற்படை ஏற்பாடு செய்த கிரிக்கெட் போட்டியிலும், கடற்கரை சுத்தம் செய்யும் திட்டத்திலும் கப்பலின் குழுவினர் பங்கேற்றனர்.

இலங்கை தீவின் கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலங்களைப் பார்வையிடுவதில் கப்பலின் பணியாளர்களும் பங்கேற்றதுடன், இலங்கை கடற்படை வீரர்களுக்கும் கப்பலின் செயல்பாட்டு நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *