ஆயுர்வேத மருத்துவ சேவைக்கு புதிய நியமனங்கள்

இலங்கை ஆயுர்வேத மருத்துவ சேவைக்கு சுகாதார மருத்துவ அதிகாரிகள் உட்பட மொத்தம் 303 பட்டதாரிகள் நியமிக்கப்படவுள்ளனர்.
இந் நிகழ்வு நாளை (3) கொழும்பு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் இடம்பெறவுள்ளது.
2018 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆயுர்வேதத் துறையில் இடம்பெறும் மிகப்பெரிய ஆட்சேர்ப்பு இது என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
