சர்வதேச கல்வி மாநாட்டில் பங்கேற்க கல்வியாளர் இல்ஹாம் மரிக்கார் கனடா பயணம்..!
பிரபல கல்வியாளர் இல்ஹாம் மரிக்கார், CBIE Conference 2025 – Canada எனும் சர்வதேச கல்வி மாநாட்டில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
உலகளாவிய கல்வி மேம்பாடு, மாணவர் பரிமாற்றம், மற்றும் புதுமையான கல்வி அணுகுமுறைகள் குறித்து விவாதிக்க ஒவ்வோர் ஆண்டும் நடைபெறும் இந்த Canadian Bureau for International Education (CBIE) மாநாட்டில் பங்கேற்பது கல்வித் துறையில் ஒரு சிறப்பான வாய்ப்பாகக் கருதப்படுகிறது.
இம்மாநாட்டில் பங்கேற்பதற்காக இல்ஹாம் மரிக்கார் தற்போது கனடாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அவரின் பங்கேற்பு, இலங்கையின் கல்வித் துறைக்கு ஒரு பெருமை சேர்க்கும் நிகழ்வாக கல்வி வட்டாரங்கள் பாராட்டியுள்ளன.
அவரின் இந்த சாதனை, சர்வதேச அளவில் இலங்கை கல்வியாளர்களின் திறமை மற்றும் பங்களிப்பை வெளிப்படுத்தும் ஒரு முக்கிய முன்னேற்றமாகக் குறிப்பிடப்படுகிறது.
