பொலித்தீன் பைகளுக்கு இன்று முதல் கட்டணம்
இரண்டு கைப்பிடிகள் கொண்ட பொலித்தீன் பைகளுக்கு வர்த்த நிலையங்கள் கட்டணம் அறவிட வேண்டும் எனும் வர்த்தமானி அறிவித்தல் இன்று (01) முதல் நடைமுறைக்கு வருகிறது.
இதற்கமைய இனிவரும் காலங்களில் பாவனையாளர்களுக்கு பொருட்களை விற்கும்போது ஷொப்பிங் பைகள் போன்ற கைப்பிடிகொண்ட பொலித்தீன் பைகளுக்கு கடைகள் ஒரு விலையை அறவிட வேண்டும்.
எனவே இனி வர்த்தக நிலையங்களில் பொலித்தீன் பைகள் இலவசமாக வழங்கப்படாது.
பொலித்தீன் பயன்பாட்டினால் சூழலுக்கு ஏற்படும் பாதிப்புக்களை குறைப்பதற்காகவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
