வணிகம்

சென்னையில் நடைபெற்ற “Unlocking Business Potential” கருத்தரங்கம்..! சிறப்புரையாற்றினார் இலங்கையைச் சேர்ந்த தொழில் முனைவர் இஹ்ஸான் வாஹித்..!

சென்னை எக்மோர் பகுதியில் அமைந்துள்ள அரிஹந்த் ஹால், அசோக்கா ஹோட்டலில் கடந்த அக்டோபர் 29, 2025 (புதன்கிழமை) அன்று “Unlocking Business Potential” எனும் தொழில் மேம்பாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது.
இந்நிகழ்வை Rifah Chamber of Commerce and Industry நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது. தொழில் துறையில் நிலையான வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு “Together for Sustainable Future” என்ற தங்கள் பணிப்பொருளின் கீழ் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்நிகழ்வின் முக்கிய விருந்தினராக இலங்கையைச் சேர்ந்த Mr. Ihsan Wahid, MBA, கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் “iKING” நிறுவனத்தின் நிறுவனர், தொழில் முனைவர், ஆடை வடிவமைப்பாளர், மற்றும் வணிக வழிகாட்டுதல் நிபுணரும் ஆவார்.

இந்த கருத்தரங்கம் தொழில் முனைவோர், வணிக நிபுணர்கள், மற்றும் புதிய தலைமுறை மாணவர்கள் தங்களின் தொழில் திறன்களை மேம்படுத்தவும், வணிகத்தில் முன்னேற்றத்தை அடையவும் தேவையான வழிமுறைகள் குறித்து பயனுள்ள அறிவுரைகளை வழங்கும் விதத்தில் அமைந்திருந்தது.
மேலும் இக்கருத்தரங்கின் பங்கேற்பாளர்களுக்காக High Tea வசதியும் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *