உள்நாடு

சர்வதேச கல்வி மாநாட்டுக்கு கல்வியலாளர் இல்ஹாம் மரைக்கார் கனடா பயணமானார்

கனடாவில் சர்வதேச கல்வியளாலர் நிகழ்வு நாளை 2 ஆம் திகதி ஆரம்பமாகி 14 நாட்கள் இடம் பெறுகின்றது.

கல்வி, சுற்றுலாத்துறை, ஏற்றுமதி இறக்குமதி, விவசாயம் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்தவர்கள் Chamber of commerce அமைப்பின் கீழ் இயங்கும் இலங்கை கனடா வர்த்தக கவுன்சிலினால் தெரிவு செய்யப்பட்டு இல்ஹாம் மரைக்கார் இம் மாநாட்டுக்கு அனுப்பப்பட்டனர்.

இதன் மூலம் இலங்கைக்கும், கனடாவுக்கும் இடையிலான பல்வேறு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படவுள்ளதாகவும், இதனால் இலங்கை பல்வேறு நன்மைகளை அடையும் என இக் குழுவில் பயணித்துள்ள Amazon College மற்றும் Amazon Campus முகாமைத்துவ பணிப்பாளர், பிரபல உளவியல் விரிவுரையாளரும்,கல்வியளா லர், ஆலோசகருமான இல்ஹாம் மரைக்கார் தெரிவித்தார்.

மாநாட்டின் முக்கிய அம்சங்களாக,

•   பன்னாட்டு கல்வி மற்றும் மாணவர் ஆதரவு

•   புதிய கூட்டாண்மைகள் மற்றும் நெட்வொர்க்கிங் வாய்ப்புகள்

•   உலகளாவிய கல்வி மாற்றங்கள் குறித்த விவாதங்கள் என்பன முக்கிய அம்சங்களாக அமையும் என்றும் இல்ஹாம் மரைக்கார் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ள கல்வியளாலர் இல்ஹாம் மரைக்கார் புத்தளத்தை பிறப்பிடமாக கொண்டவரும்,புத்தளம் மற்றும் கொழும்பு சாஹிரா கல்லுாரிகளின் பழைய மாணவர் என்பதுடன் பேராதனை பல்கலைக்கழகத்தின் உளவியல் பீடத்தின் பகுதி நேர விரிவுரையாளராகவும் பணியாற்றிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *