உள்நாடு

ஊடகவியலாளர்களுக்கு விசேட இலவச கண் பரிசோதனையும், கண்ணாடி வழங்கும் நிகழ்வும்

ஊடகவியலாளர்களுக்கு விசேட இலவச கண் பரிசோதனையும் கண்ணாடி வழங்கும் நிகழ்வும் இன்று நவம்பா் 01 சனிக்கிழமை காலை 08.00 மணி தொடக்கம் மு.ப.01.00 மணிவரை கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையில் நடைபெற்றது.

பார்வைக் குறைபாடுகள் உள்ள ஊடகவியலாளர்களுக்கு இலவசமாக கண்னாடி வழங்கும் இச்சேவை தகவல் திணைக்களத்தினால் வழங்க்ப்பட்ட ஊடக அடையாள அட்டையுடையவர்களுக்கு இச்சேவை வழங்கப்படுகின்றது.

ஆரம்ப நிகழ்வில் சுகாதார சேவைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் அனில் ஜெயசிங், தேசிய கண் வைத்தியசாலையின் பணிப்பாளர் சிரேஷ்ட வைத்திய ஆலோசகர் ஜெயருவன் பண்டார, கண் சத்திர சிகிச்சை நிபுணர் கபில பண்டுதிலக, இதய சத்திர சிகிச்சை நிபுணர் குசும் ரட்நாயக்க , சுகாதார சேவை அதிகாரி மெனிக் அப்பேற்பட்ட, வைத்திய தாதி திருமதி நடீ ராஜகருண உள்ளிட்ட தாதியர் , கண் வைத்தியர்கள் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது பெருமளவான அச்சு மற்றும் இலத்திரணியல் ஊடகவியலாளர்கள் கண் பரிசோதனைக்காக வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

(ஏ.எஸ்.எம்.ஜாவித்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *