உள்நாடு

புத்தளம் பாத்திமா கல்லூரியின் மாபெரும் பரிசளிப்பு நிகழ்வு

2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் க. பொ. த சாதாரண தர பரீட்சை மற்றும்
க. பொ. த உயர்தர பரீட்சைகள் உட்பட இணை பாடவிதான செயற்பாடுகளில் தேசிய மற்றும் மாகாண ரீதியில் அதிகூடிய அடைவுகளை பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் பரிசளிப்பு விழா புத்தளம் பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரி அதிபர் எ. எல் சரீனா பர்வின் தலைமையில் கல்லூரியின் பிரதான வரவேற்பு மண்டபத்தில் நேற்று முன்தினம் (29) இடம்பெற்றது.

பிரதம அதிதியாக புத்தளம் வலய கல்வி பணிப்பாளர் ஆர்.டி.என். பிரசாத் அவர்கள் கலந்து சிறப்பித்தார். கௌரவ அதிதிகளாக புத்தளம் மாவட்ட கௌரவ.பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜே.எம். பைசல் மற்றும் புத்தளம் மாநகர சபையின். முதலாவது மேயர் ரின்சாத் அஹமட் அவர்களும் கலந்து கொண்டனர். அத்துடன் 300 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பெறுமதியான பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்ட இந்நிகழ்வில் பெருந்திரளான பெற்றோர்கள், கல்வியியலாளர்கள், நலன் விரும்பிகள், பழைய மாணவிகள் உட்பட அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

புத்தளம் பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியின் 63 வருட வரலாற்றில் 2024 (2025) க. பொ. த சா /த ) பரீட்சை பெறுபவர்களில் 29 மாணவிகள் 9 ஏ சித்திகளைப் பெற்று வடமேல் மாகாணத்தில் முன்னிலை வகித்திருந்தனர்.சுமார் 2000 ம் மாணவர்கள் வரை கல்வி பயிலும் வடமேல் மாகாணத்தின் ஒரேயொரு மும்மொழி முஸ்லிம் பெண்கள் அரசினர் பாடசாலையான புத்தளம் பாத்திமா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலயம் நீண்ட காலமாக அதிகமான பௌதீக வளப்பற்றாக்குறைகளுடன் தொடர்ந்து இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

(ஏ.என்.எம் முஸ்பிக் புத்தளம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *