புத்தளம் இந்து கல்லூரியின் விஞ்ஞான கண்காட்சி
புத்தளம் இந்து மத்திய கல்லூரியின் விஞ்ஞான மன்றம் ஏற்பாடு செய்த மாணவர்களின் விஞ்ஞான கண்காட்சியும் விஞ்ஞான ஆய்வுகூட மீள் நிர்மாணத்திற்கு பின்னரான திறப்பு விழாவும் கல்லூரியின் அதிபர் பி.ஆர். தம்பிதுரை அவர்களின் தலைமையில் நேற்று (30) இடம் பெற்றது.
இந்நிகழ்வின் விஷேட அதிதியாக புத்தளம் வலய பிரதி கல்விப் பணிப்பாளர் கே.எம். காந்திலதா அவர்கள் கலந்துகொண்டதோடு,சமயத் தலைவர்கள் பெற்றோர்கள், நலன் விரும்பிகள் உட்பட அருகிலுள்ள பாடசாலை மாணவர்களும் கண்காட்சியை பார்வையிட வருகை தந்திருந்தனர்.





(ஏ.என்.எம் முஸ்பிக்- புத்தளம்)
