கற்பிட்டி பிரதேச சபையின் 2026 ம் ஆண்டிற்கான வரவு செலவு அறிக்கை மேலதிக இரண்டு வாக்குகளால் வெற்றி

கற்பிட்டி பிரதேச சபையின் 2026 ம் ஆண்டிற்கான வரவு செலவு அறிக்கைக்கு சபையின் தவிசாளர் ஏ.எஸ்.எம் றிகாஸ் தலைமையில் வியாழக்கிழமை (30) சமர்ப்பிக்கப்பட்டது இதன்போது அதரவாக 17 வாக்குகளும் எதிராக 15 வாகனங்களும் கிடைக்கப்பெற்றது. இதன் மூலம் மேலதிக இரண்டு வாக்குகளினால் கற்பிட்டி பிரதேச சபையின் வரவு செலவு அறிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது
2026 ம் ஆண்டிற்கான உத்தேச மொத்த வருமானமாக 308,007,062.00 எனவும்
உத்தேச மொத்த செலவாக 308,006,013.00 எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ் )
