அருனோதய சித்தம் என்ற தொனியில் மேல் மாகாண சிறுவர் சித்திரப் போட்டி.

மேல் மாகாண பாலர் பாடசாலை பிள்ளைகளின் பங்களிப்புடன் ‘அருனோதயே சித்தம்’ என்ற நாமத்தில் பதினொரு வலய மட்டத்திலான சிறுவர்களுக்கான சித்திரம் வரைதல் போட்டி நிகழ்வொன்று நடத்தப்பட்டதுடன் அதன் இறுதி நிகழ்வு அண்மையில் கொழும்பில் இடம்பெற்றது.
பாலர் பாடசாலைகளின் திறன் அபிவிருத்தியின் ஓரங்கமாக இந்த வேலைத் திட்டம் மேற்கொள்ளப் பட்டுள்ளதுடன் சித்திரம் வரைதல் போட்டியில் பங்குபற்றிய அனைத்து சிறார்களுக்கும் சான்றிதழ் மற்றும் பரிசில்களும் ஆளுநர் உள்ளிட்ட அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டன.ஆளுநர் உள்ளிட்ட அதிதகள் சிறார்களுடன் நெருங்கிய மகிழ்ச்சி பகிர்ந்து கொண்டனர்.
கொழும்பு மாகராட்சி மன்ற மேயரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் சர்வதேச சிறுவர் தினம் தொடர்பில் அண்மையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப், தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தெஹிவளை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான சமன்மலி குணசிங்க, கொழும்பு மேயர் விராய் கெலி பல்தசார், மேல்மாகாண சபை அரச அதிகாரிகள் மற்றும் அட்லஸ் அனுசரணை நிறுவன பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.



(எம்.எஸ்.எம்.முன்தஸிர்)
