AKEBONO’ கப்பல் குழுவினர் இலங்கை கடற்படையுடன் இணைந்து கடற்கரை சுத்தம் செய்யும் திட்டத்தில் பங்கேற்றது

உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கைக்கு வருகை தந்த ஜப்பானிய கடல்சார் தற்காப்புப் படைக் கப்பலான ‘AKEBONO’ இன் குழுவினர் புதன்கிழமை (29,) காலை காலி முகத்திடலில் இலங்கை கடற்படையுடன் இணைந்து கடற்கரை சுத்தம் செய்யும் திட்டத்தை வெற்றிகரமாக மேற்கொண்டனர்.
கிளீன் ஶ்ரீ லங்கா தேசிய வேலைத் திட்டத்தின் கீழ், “சுத்தமான கடற்கரை – ஒரு கவர்ச்சிகரமான சுற்றுலாத் தளம்” என்ற தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, தீவைச் சுற்றியுள்ள கடற்கரையை சுத்தம் செய்யும் சமூக சேவை திட்டத்திற்கு இலங்கை கடற்படை தொடர்ந்து பங்களித்து வருகிறமை குறிப்பிடத்தக்கது.



(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
