15 வருடங்களுக்கு மேலாக முஅத்தினாக சேவையாற்றிய இஷாக் ஹாஜியாரை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு

அக்குரனை அஸ்னா ஜும்ஆ பள்ளிவாயல் நிர்வாக சபை ஏற்பாட்டில் இப்பள்ளிவாயிலில் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக முஅத்தினாக (அதான் சொல்லும்) சிறந்த சேவையாற்றி ஓய்வு பெற்றுச் செல்லும் இஷாக் ஹாஜியாரை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு நேற்று முன்தினம்24 வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்கு பின் மேற்படி பள்ளிவாயலில் இடம் பெற்றது இதன் போது முஅத்தின் இஷாக் ஹாஜியாருக்கு நினைவுச் சின்னம் வழங்கி பொன்னாடை போத்தி பல இலட்சம் ரூபாய் பணத்தொகைக்கான காசோலையும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது மேற்படி பள்ளிவாயல் நிர்வாக சபை தலைவர் சட்டத்தரணி அஸ்மி பாரூக் இதனை வழங்கி வைப்பதை படத்தில் காணலாம்
(மாத்தளை எம்.சதூர்தீன்)
