உள்நாடு

போதைப் பொருள் தகவல்களை வழங்க 1818 ஐ அழையுங்கள்.

News Update – 2

விஷ போதைப்பொருட்களை ஒழிப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள ‘முழு நாடுமே ஒன்றாக’ எனும் தேசிய செயற்பாட்டுக்கு இணையாக, தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவினால் 24 மணி நேரம் இயங்கும் துரித தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய செயற்குழுவின் கோரிக்கையின் பேரில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘1818’ என்ற துரித தொலைபேசி இலக்கம் மூலம், நாட்டின் எந்தவொரு இடத்திலும் நடைபெறும் போதைப்பொருள் கடத்தல், விநியோகம் அல்லது அது தொடர்பான சந்தேகத்துக்குரிய செயற்பாடுகள் பற்றிய சரியான தகவல்களைப் பொதுமக்கள் வழங்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *