உள்நாடு

கண்டி விவேகானந்தா தமிழ் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற சிறுவர் துஷ்பிரயோக விழிப்புணர்வு நிகழ்ச்சி..!

கண்டி குண்டசாலையில் அமைந்துள்ள விவேகானந்த தமிழ் மகா வித்தியாலயத்தில் இன்று சிறுவர் துஷ்பிரயோகத்தைப் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
International Human Rights Global Mission அமைப்பினால் நடாத்தப்பட்ட இந்நிகழ்வில் அந்த அமைப்பின் இயக்குநர்களான திருமதி யு. காயத்ரி மனோஜ், திருமதி ஏ. ஹபீசா பேகம், இணைப்பாளர் மற்றும் ஊக்கமூட்டும் பேச்சாளர் திருமதி நிஷாந்தி நடராஜ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
பாடசாலையின் பெருமளவிலான மாணவர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில், சிறுவர்கள் மீது நடைபெறும் துஷ்பிரயோகங்களைத் தடுக்க வேண்டியதன் அவசியம், அதன் சமூக விளைவுகள் மற்றும் சிறுவர்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுகள் பற்றி விரிவாக விளக்கப்பட்டன.
இந்நிகழ்ச்சி மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியதுடன், சமூக பொறுப்புணர்வையும் வலுப்படுத்திய முக்கிய நிகழ்வாக அமைந்தமை குறிப்பிடத்தக்கது.

(திருமதி யு. காயத்ரி மனோஜ்- DIRECTOR; IHR- GM)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *