உலகம்

350 மீட்டர் உயரத்தில் சவூதியில் கால்பந்து அரங்கு; 2027 ல் பணிகள் ஆரம்பம்

சவுதி அரேபியாவில் 350 மீட்டர் உயரத்தில் புதிய கால்பந்துத் திடல் அமைக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.

46,000 பார்வையாளர்கள் அமர்ந்து போட்டியைப் பார்க்கும் வகையில் பிரமாண்டமாக அமையவுள்ள இந்தத் திடல், சூரிய சக்தி மற்றும் காற்றாலை மின்சக்தியின் மூலம் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எண்ணெய் வளங்கள் மட்டுமே நிறைந்துள்ள சவுதி அரேபியா, பயணிகளைக் கவரும் வகையில் பல புதிய கட்டுமானங்களை நிறுவி வருகின்றன. அந்தவகையில், உலகம் முழுவதுமுள்ள கால்பந்து ரசிகர்களைக் கவரும் வகையில் நியோம் பகுதியில் 350 மீட்டர் உயரத்தில் கால்பந்துத் திடல் கட்ட செளதி திட்டமிட்டுள்ளது.

இதன்மூலம் உலகின் மிக உயரமான திடல் என்ற பெருமையை இது பெரும். இதற்கு நியோம் ஸ்டேடியம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. 2027ஆம் ஆண்டு இதற்கான பணிகள் தொடங்கவுள்ளன. 2032ஆம் ஆண்டிற்குள் கட்டி முடிக்க செளதி திட்டமிட்டுள்ளது.

2034 ஆம் ஆண்டு நடைபெறும் பிபா உலகக் கிண்ண கால்பந்து போட்டியை நியோம் ஸ்டேடியத்தில் நடத்தும் வகையில் பணிகளை முடிக்க செளதி முடிவு செய்துள்ளது.

சுற்றுலாப் பயணிகள் மற்றும் சுற்றுலா முதலீடுகளை ஈர்க்கும் வகையில் சவுதி அரேபியாவின் ‘விஷன் 2030’ என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக நியோம் ஸ்டேடியம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *