நீர்கொழும்பு ஓய்வு பெற்ற அதிபர் அல்ஹாஜ் உவைஸ் காலமானார்..!
நீர்கொழும்பு பலகத்துறை சேர்ந்த ஓய்வு பெற்ற அதிபர் அல்ஹாஜ் எம். சி.எம். உவைஸ் தனது 89 வது வயதில் காலமானார்.
கல்வித் துறையில் அளப்பரிய பங்காற்றியுள்ள மர்ஹூம் உவைஸ் 1959 ஆம் ஆண்டு ஆசிரியர் சேவையில் இணைந்தார். நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஆசிரியர், அதிபர் பதவிகளை வகித்த அவர், 31 ஆண்டு கால கல்விச் சேவை பின்னர் ஓய்வு பெற்றார். நார்த்தாண்டியா, கொற்றாமுல்லையை பிறப்படமாகக் கொண்ட இவர் ஓய்வு பெறும் போது கொழும்பு மாளிகாவத்தை தாருஸ்ஸலாம் மகா வித்தியாலத்தில் அதிபராக பணிபுரிந்தமை குறிப்பிடத்தக்கது.
கல்வித்துறைக்கு மேலதிகமாக, பிரதேசத்தின் ஆத்மீக வளர்ச்சிக்கு அளப்பரிய பங்களிப்புச் செய்து வந்த இவர், இவருடைய ஊரான கொற்றாமுல்லையின் பள்ளிவாசலை நிர்மாணிப்பதில் மகத்தான பங்காற்றியவராவார்.
மேலும் இவர் மூன்று பிள்ளைகளைகளின் தந்தையாவார்.
நீர்கொழும்பு அல்ஹிலால் மத்திய கல்லூரியின் முன்னாள் அதிபர் மர்ஹூம் ஹுஸ்னி ஷராஃப் இவரது மூத்த மகன் ஆவார்.
மற்றொரு மகள் ஷஹீலா நஸ்ரின் ஆங்கில ஆசிரியராக பணிபுரிகிறார். இவரது மற்றுமொரு மகன் அல்ஹாஜ். ஹம்தி பிரதேசத்தின் பிரபல வர்த்தகராவார்.
இவர், சிலாபம் நகர சபை முன்னாள் தலைவரும் பிரபல சட்டத்தரணியுமான சாதிகுல் அமீனின் மாமனாரும் ஆவார்.
இவருடைய ஜனாஸா கடந்த வியாழக்கிழமை பலகத்துறையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
