மலேசிய கடலோர காவல்படை கப்பலான ‘KM BENDAHARA’ இலங்கையை வந்தடைந்தது
மலேசிய கடலோர காவல்படை கப்பலான ‘KM BENDAHARA’ திங்கட்கிழமை ( 27,) வழங்கல் மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கையை வந்தடைந்ததுடன், இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு இணங்க கொழும்பு துறைமுகத்தில் குறித்த கப்பலை வரவேற்றனர்.
இலங்கையை வந்தடைந்துள்ள / RELIANCE CLASS – MEDIUM ENDURANCE CUTTER’ வகைக்குரிய ‘KM BENDAHARA’ என்ற கப்பல் 64.16 மீட்டர் நீளம் கொண்டதுடன், 50 பேரினை கொண்ட அங்கத்துவ குழுவினரைக் கொண்டுள்ளதுடன், மேலும் இந்தக் கப்பலின் கட்டளை அதிகாரியாக கொமாண்டர் (Maritime) MOHD FAHIMI BIN OMAR கடமையாற்றுகின்றார்.
‘KM BENDAHARA’ கப்பல் தீவில் தங்கியிருக்கும் காலத்தில், கப்பலின் குழுவினர் தீவின் முக்கிய இடங்களைப் பார்வையிட பல பகுதிகளுக்குச் செல்ல உள்ளதுடன், இந்தக் கப்பல் தனது உத்தியோகபூர்வ பயணத்தை முடித்துக்கொண்டு 2025 அக்டோபர் 30 ஆம் திகதி அன்று இலங்கையில் இருந்து புறப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.





(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
