உள்நாடு

மு.கா. தலைவர் ஹக்கீம் குழுவினர் ஜெய்லானி பள்ளிக்கு வருகை

பலாங்கொடை – ஜெய்லானி ஜும்ஆ பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் அழைப்பின் பேரில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவரும் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அல்ஹாஜ் ரவூப் ஹக்கீம் அவர்களின் தலைமையில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கட்சியின் பொதுச்செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நிசாம் காரியப்பர்(PC), ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தேசிய அமைப்பாளரும், திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.உதுமாலெப்பை, பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.அப்துல் வாஸித், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், கட்சியின் தேசிய இளைஞர் அமைப்பாளருமாகிய எஸ்.எம்.எம். முஷர்ரப் முதுநபீன், கட்சியின் அம்பாறை மாவட்ட செயலாளர் ஏ.சி.சமால்தீன் ஆகியோர் விஜயம் செய்தனர்.

பலாங்கொடை – ஜெயிலானி ஜும்ஆ பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் சார்பில் தலைவர் அல்ஹாபிழ் மௌலவி அப்துல்லாஹ் அவர்களும் , செயலாளர் சிராஸ் சம்சுதீன், உபதலைவர் சிராஜ் நஜாஹி, சல்மான் நஜாஹி மற்றும் உலமாக்களும் , பேராதனை பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி முபிஸால் அபுபக்கர் , தொழிலதிபர் கபூல் ஆஸாத் ஆகியோர் கலந்து கொண்டனர் .

இதன்போது பலாங்கொடை ஜெய்லானி ஜும்ஆ பள்ளிவாசல் தொடர்பான குறைபாடுகள் மற்றும் முஸ்லிம்களின் பாரம்பரியங்களையும், உரிமைகளையும் பாதுகாப்பதற்கு எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

(கே. எ. ஹமீட்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *