உள்நாடு

சீனன் கோட்டை வாலிபர் ஹழரா ஜமஅத்தின் 5 தசாப்த கால பணிகளுக்கு பிரதி அமைச்சர் அர்கம் இலியாஸ் பாராட்டு;46 ஆவது வருட மீலாத் விழா பெருகமலை ஸாகிரீன் குர்ஆன் மத்ரஸா முதலாம் இடம்

பேருவளை சீனன் கோட்டை வாலிபர் ஹழரா ஜெமாஅத் சீனன்கோட்டை பள்ளி சங்கத்தின் அனுசரனையுடன் வருடாந்தம் நடாத்தி வரும் சீனன்கோட்டை குர்ஆன் மத்ரஸாக்களுக்கிடையிலான சன்மார்க்க போட்டிகளுடனான மீலாதுன் நபி விழாவில் பெருகமலை ஸாக்கிரீன் குர்ஆன் மத்ரஸா முதலாம் இடத்தையும், குட்டிமலை ஜலாலிய்யா குர்ஆன் மத்ரஸா இரண்டாம் இடத்தையும், அக்கரகொடை தாஜூல் மபாஹிரிய்யா குர்ஆன் மத்ரஸா மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டது.

சீனன் கோட்டை பள்ளிச் சங்க இனைச் செயலாளரும் அகில இலங்கை ஜெம்மியத்துல் உலமா சபையின் நிரைவேற்றுக் குழு உறுப்பினருமான கலீபதுஷ் ஷாதுலி அல்ஹாஜ் அஷ் ஷேஹ் இஹ்ஸானுதீன் அபுல் ஹஸன் (நளீமி) யின் வழிகாட்டலின் கீழ் 25.10.2025 சனிக்கிழமை; அல் ஹ_மைஸரா தேசிய பாடசாலை எஸ்.எம். ஜாபிர் ஹாஜியார் மண்டபத்தில் சீனன் கோட்டை பள்ளிச்சங்கத் தலைவர் அல் ஹாஜ் ஏ.எச்.எம் முக்தார் தலைமையில் நடைபெற்றது.

மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், எரிசக்தி பிரதி அமைச்சருமான அர்கம் இலியாஸ் பிரதம அதிதியாகவும், கௌரவ அதிதியாகவும், தேசபந்து டாக்டர் ரயீஸ் மீரா விஷேட அதிதியாகவும், கொழும்பு மஹ்மூதிய்யா அரபுக் கல்லூரி அதிபர் அல் உஸ்தாத் மௌலவி எம்.எம்.அஸ்மீர் (ஹஸனி) சிறப்பு பேச்சாளராக கலந்து கொண்டனர்.

வாலிபர் ஹழரா ஜமாஅத் தலைவர் பஸீஹ_ர் ரஹ்மான் வரவேற்புரை நிகழ்த்தியதோடு செயலாளர் முஹம்மத் அஸ்மிர் நன்றியுரை நிகழ்த்தினார்.

கிராத் மனனம், கஸீதா, கஸீதா இறைதூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் பற்றிய பேச்சு, தரீக்கா பற்றிய பேச்சு, கேள்வி-பதில், மணிமொழி, சாதுலிய்யா ஹழரா பைத் உட்பட 30 வகையான சன்மார்க்க போட்டி நிகழ்ச்சிகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இவ்விழாவில் சீனன் கோட்டை அல் ஹுமைஸரா தேசிய பாடசாலை, நளீம் ஹாஜியார் மகளிர் கல்லூரி, சீனன் கோட்டை ஆரம்பப் பாடசாலை ஊரில் உள்ள சர்வதேச பாடசாலை மற்றும் வெளியூர் பாடசாலைகளில் கல்வி கற்று தேசிய பரீட்சைகளில் சித்தியடைந்த சீனன் கோட்டையைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கௌரவிக்கப்பட்டமை விஷேட அம்சமாகும்.

கலீபதுஷ் ஷாதுலி அஷ் ஷெய்க் இஹ்ஸானுத்தீன் அபுல் ஹஸன் (நளீமி) ஹழரா ஜமஅத் ஸ்தாபர் உறுப்பினர் அல் ஹாஜ் பர்ஸான் முர்ஸி ஆகியோர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.
பாராளுமன்ற உறுப்பினரும் பேருவளை அபிவிருத்திக் குழு தலைவருமான சந்திய ஹெட்டியாரச்சி, மேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் அல் ஹாஜ் இப்திகார் ஜமீல், பேருவளை நகர பிதா மபாஸிம் அஸாஹிர், இலங்கையின் முன்னாள் பலஸ்தீன தூதுவர் அல் ஹாஜ் பௌஸான் அன்வர், சீனன் கோட்டை பள்ளிச்சங்க உபதலைவர்களான அஷ் ஷெய்க் எம்.எஸ்.எம் ரில்வான் (நளீமி), அல் ஹாஜ் முஸ்தாக் ஜாபிர் இணைச் செயலாளர்களான அல் ஹாஜ் எம்.எம்.எம் ஷிகாப், அரூஸ் அனஸ், இணைப்பொறுளாளர் அல் ஹாஜ் ஸப்வான் நைம், உறுப்பினர்களான அல் ஹாஜ் தஹ்லான் மன்ஸர், அல் ஹாஜ் முஸ்னி உவைஸ், சீனன் கோட்டை ஜாமியதுல் பாஸியதுஷ் ஷாதுலிய்யா கலாபீட பணிப்பாளர் மௌலவி எம்.ஜே.எம் பஸ்லான் (அஷ்ரபி), அதிபர் மௌலவி எம். அஸ்மிகான் (முஅய்யிதி), சீனன் கோட்டை குர்ஆன் மதாரிஸ் பணிப்பாளர் மௌலவி எம்.டப்லியு.எம் பஹ்ரூத்தீன் (மிஸ்பாஹி), தேசிய மக்கள் சக்தி களுத்துறை மாவட்ட நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அரூஸ் அஸாத், தேசிய மக்கள் சக்தி பேருவளை அமைப்பாளர் ரம்ஸான் ஷிஹாப்தீன், நகர சபை உறுப்பினர் ஸைத் அஹ்மத், மொவ்லவி முஹம்மத் ஸஹ்ல் (அஸ்ஹரி), பேருவளை பொலீஸ் நிலை பொறுப்பதிகாரி எம்.ஆர் நவரத்ன, முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தின் முகாமைத்துவ உதவியார் அஷ் ஷெய்க் முப்தி முர்ஸி (நளீமி), அல் ஹமைஸரா தேசிய பாடசாலை உப அதிபர் நைஸர் தாஹா, கலீபதுஷ் ஷாதுலிகளான மௌலவிகள் எம். ஸைனுல்ஆப்தீன் (பஹ்ஜி), எம்.ஐ.எம் பாரூக் (மக்கி) உட்பட கலீபாக்கள், உலமாக்கள், பெற்றோர்கள், பிரமுகர்கள், குர்ஆன் மத்ரஸா அதிபர்கள என பலரும் விழாவில் கலந்து கொண்டனர்.

சீனன் கோட்டை வாலிபர் ஹழரா ஜமஅத்தின் 5 தசாப்த கால பணிகளை பிரதி அமைச்சர் அர்கம் இல்யாஸ் உட்பட அதிதிகள் இங்கு பாராட்டிப் பேசினர்.

(பீ.எம். முக்தார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *