புறக்கணிக்கும் பிரதேச சபை; மக்கள் ஒத்துழைப்புடன் வடிகான் துப்புரவுப்பணி முன்னெடுப்பு
வாழைச்சேனை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட மாவடிச்சேனை பிரதேசத்திலுள்ள வடிகான்களை துப்புரவு செய்து தருமாறு பல்வேறு கோரிக்கைகள் தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர் ஏ.எல்.சமீமினால்; முன்வைக்கப்பட்ட நிலையில் தொடர் புறக்கணிப்பை பிரதேச சபை மேற்கொண்டு வருவதனால் பிரதேச சபை உறுப்பினரின் முயற்சியினால் இன்று வடிகான் துப்பரவு செய்யப்பட்டது.
தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர் ஏ.எல்.சமீம் கோறளைப்பற்று மத்தி பதில் பிரதேச செயலாளர் ஏ.தாஹிர், ஓட்டமாவடி பிரதேச சபைத்தவிசாளர் எம்.எச்.எம்.பைறூஸ், தேசிய மக்கள் சக்தியின் செயற்பாட்டாளர் எம்.ஏ.சி.எம்.நியாஸ் ஆகியோரின் ஒத்துழைப்போடு மாவடிச்சேனை அல் இக்பால் வித்தியாலய வீதியிலுள்ள வடிகான் இருபது வருடங்களின் பின்னர் துப்பரவு செய்யும் பணி இன்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இருபது வருடங்களாக எந்தவொரு புனரமைப்புக்களும் இடம்பெறாமல் கவனிப்பாறற்று புறக்கணிக்கப்பட்டிருந்த குறித்த வடிகான் கிளீன் சிறீ லங்கா வேலைத்திட்டத்தின் கீழ் தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர் ஏ.எல்.சமீமினால் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
குறித்த விடயம் தொடர்பில் சபையின் நான்கு அமர்வுகளின் போதும் பல தடவை கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தும் எழுத்து மூல கோரிக்கை விடுக்கப்பட்டிருந்து தொடர்ந்து புறக்கணிக்கப்பட்ட குறித்த பிரதேச வடிகான் துப்புரவு பணியினை மழைக்காலம் ஆரம்பித்த நிலையில் விரைவாக செய்து முடிக்கப்பட வேண்டும் எனும் நோக்கில் துரிதமாக செயற்பட்ட பிரதேச பள்ளிவாயல்கள், பிரதேச சமூகமட்ட அமைப்புக்கள், இளைஞர்களின் ஒத்துழைப்போடு முன்னெடுக்கப்பட்டு வருகின்றமைக்கு தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர் ஏ.எல்.சமீம் நன்றியை தெரிவித்தார்.





(எஸ்.எம்.எம்.முர்ஷித்)
