வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்; சூறாவளியாக மாற்றமடையலாம்
வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்திற்கு மேலாக காணப்பட்ட தாழமுக்கமானது (Depression), கடந்த 06 மணித்தியாலத்தில் மணிக்கு 08km/h எனும் வேகத்தில் மேற்கு-வட மேற்கு திசையில் நகர்ந்து, இன்றும் அதே பிரதேசத்தில் காணப்படுகிறது.
இது, மட்டக்களப்பில் இருந்து வடகிழக்காக கிட்டத்தட்ட 750km தூரத்திலும், திருகோணமலையில் இருந்து வடகிழக்காக 760km தூரத்திலும்,
யாழ்ப்பாணத்தில் இருந்து கிழக்கு-வடகிழக்காக 830km தூரத்திலும் காணப்படுகின்றது.
இதேபோல், Port Blair (Andaman & Nicobar) இலிருந்து மேற்காக 550km தூரத்திலும், சென்னையில் (Tamil Nadu) இருந்து கிழக்கு-தென்கிழக்காக 850km தூரத்திலும், விசாகப்பட்டிணத்தில் (Andhra Pradesh) இருந்து தெற்கு-தென்கிழக்காக 880km தூரத்திலும்,
காக்கிநாடாவில் (Andhra Pradesh) இருந்து தென்மேற்காக 880km தூரத்திலும், கோபால்புர் (Odisha) இருந்து தெற்கு-தென் கிழக்காக 960km தூரத்திலும் தற்போது காணப்படுகின்றது.
இது மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (26.10.2025) காலை ஆழ்ந்த தாழமுக்கமாக (Deep Depression)வலுவடைந்து,
அதன் பின்னர் இன்று மாலை தென்மேற்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியம் மற்றும் அதனை சூழ உள்ள மேற்கு-மத்திய வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்திற்கு மேலாக இன்று ஒரு சூறாவளி புயலாக (Cyclonic Storm) வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதன் பின்னர் இது நாளை மறுதினம் அதாவது எதிர்வரும் 28ஆம் திகதி காலை ஒரு ஆழ்ந்த சூறாவளி புயலாக (Severe Cyclonic Storm) மேலும் வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
(இது ஒரு சூறாவளியாவாக வலுவடையும் பொழுது இதற்கு தாய்லாந்து நாட்டினால் பரிந்துரை செய்யப்பட்ட Montha எனும் பெயர் இதற்கு வழங்கப்படும்.) (Pronounce as Mon-Tha)
அதனைத் தொடர்ந்து இது வடக்கு-வடமேற்கு திசையில் தொடர்ச்சியாக நகர்ந்து, எதிர்வரும் 28ஆம் திகதி மாலை அல்லது இரவு ஆந்திர பிரதேசம் கரையோரத்தில் Machilipatnam இற்கும் Kalingapatnam இற்கும் இடையில் ஒரு புயலாக ( Severe Cyclonic Storm) ஊடறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த சந்தர்ப்பத்தில் வீசும் காற்றின் வேகமானது 90km முதல் 100km வரையான வேகத்தில் காணப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
