கட்டுரை

50 வருடங்களை பூர்த்திசெய்துள்ள சீனன் கோட்டை வாலிபர் ஹழரா ஜமாஅத்தின் தோற்றமும் வளர்ச்சியும்

பேருவளை சீனன்
முஸ்லிம் இளைஞர்களின் அறிவையும், ஆற்றலையும், சக்தியையும், சமய, சமூக, கல்விப் பணிகளுக்கு உரமாக்கி அவர்களின் செயற்பாட்டையும், உறுதிப்படுத்தி இஸ்லாத்தினதும், முஸ்லிம் சமூகத்தினதும் எழுச்சிக்கும், வளர்ச்சிக்கும் அடித்தளமிடும் உயரிய குறிக்கோளுடன் வாலிபர் ஹழரா ஜெமாஅத் உருவாக்கப்பட்டது.

இற்றைக்கு சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னர் சாதுலியாக்கோட்டை என்ற அடைமொழிகொண்ட சீனன்கோட்டை வடுகொடைப் பகுதியிலுள்ள முகத்தமுஷ்ஷாதுலி மர்ஹூம் ஸயீத் ஹாஜியாரின் இல்லத்தில் ஒரு புர்தா சங்கம் அங்குரார்பணம் செய்து வைக்கப்பட்டது. அந்த புர்தா சங்கத்தின் வளர்ச்சியுருவே இன்று அனைவர் முன்னிலையிலும் தேற்றமளிக்கும் வாலிபர் ஹழரா ஜெமாஅத்.

பத்து நாட்கள் இளைஞர்கள் ஒன்றுகூடி நபிகளின் புகழாரமாம் புர்தாவை அழகாக ஓதி, முஸாக்கராவும் நடாத்தி இறுதித்தினத்தில் நாச்சா வழங்கிவந்த நிகழ்ச்சிகள் இன்று போல் எம் உள்ளங்களில் பசுமையாக நிலைத்திருக்கின்றன.

சிறுதொகை இளைஞர்களுடன் உருவாக்கப்பட்ட இச்சங்கம் வளர்ச்சிப்பாதையில் பயணத்தைத் தொடர்ந்து எனினும் காலத்தின் தேவை உணரப்பட்டு இவ்விளைஞ்சர் அமைப்பு “வாலிபர் ஹழரா ஜெமாஅத்” எனப்பெயர் மாற்றம் பெற்றது. பெயர் மாற்றத்தைத் தொடர்ந்து இவ்வியக்கம் தன் பணியை பரவலாக்க முனைத்து குறிப்பாக சாதுலியா தரீக்காவின் வளர்ச்சி கருதியும், பொதுவாக சமய கலாசார, பண்பாட்டு உயர்ச்சி கருதியும் செயற்படத்தொடங்கிய இவ்விளைஞரவை சாதுலியாத் தரீக்காவின் முக்கிய அமல்களில் ஒன்றாகிய ஹழராவை கருவாகத் தெரிந்து “வாலிபர் ஜெமாத்” எனும் பெயர் மாற்றம் பெற்றதே நிகழ்ச்சியாகும்.

இவ்வியக்கத்தின் குறுகிய கால வரலாற்றைப் புரட்டும் போது அது மேற்கொண்ட பல பணிகள் எம் மனக்கண்ணிலே தோற்றுவதைக் காணலாம். தரிக்காவை வளர்க்கவும், அதன் எதிர்கால வளர்ச்சியை உறுதிப்படுத்தவும், ஊரில் சமய, சமூகப் பணிகளை மேற்கொள்ளவும் எடுத்துவைத்த சுவடுகள் போற்றத்தக்கவை. அழிவுறாதவை சீனன் கோட்டை பள்ளிச் சங்கம், சீனன்கோட்டைப் பகுதி வாழ் மக்கள் மனம் கோனாது நல்கிய ஆதரவும், பங்களிப்பும், எமது இயக்கத்தின் சேவைக்கு உந்துசக்தியாக மிளிர்ந்ததை நாம் மறக்கவில்லை. அதற்காக நாம் அம்மக்களுக்கு என்றும் கடப்பாடுடையோம். உள்ளத்தாலும் உடலாலும், பணத்தாலும், பொருளாலும், ஆலோசனைகளாலும் சீனன்கோட்டை மக்கள் நல்கிய பேருதவிகளை நாம் பல எதிர்ப்புகளையும் இன்னல்களையும் முறியடித்து தலை நிமிர்ந்து நிற்கிறோம். என்று கூறிக் கொள்வதில் திருப்தி அடைகிறோம். புகழ் எல்லாம் அல்லாஹ்வுக்கே! அல்ஹம்துலில்லாஹ்.

“வாலிபர் ஹழரா ஜெமாஅத்” தூய எண்ணத்துடன் தன் உயரிய விருமியங்களை செயற்படுத்தத் தொடங்கியமையினால் சீனன்கோட்டைக்குக்ள் மட்டுமல்லாது நாட்டின் எண்கோணங்களிலும் வாழும் சாதுலியாக இஃவான்களுடனும், ஏனைய தரீக்காக்களின் இஃவான்களுடனும் தொடர்பையும் நட்பையும் ஏற்படுத்த முடிந்தவரை யாவரும் ஏற்றுக்கொள்வார்.

நாம் இன்று அரசியல் கலப்படம் அற்ற, சுதந்திரமான இயக்கமாக இயங்கி வருகின்றோம். என்று கூறிக்கொள்வதில் சந்தோசப்படுகின்றோம். இறைபணியும், இஸ்லாத்தின் வளர்ச்சியும், சமூகத்தின் உயர்த்தியுமே எமது உறுதியான நிலைப்பாடாகும்.

சீனன்கோட்டை “வாலிபர் ஹழரா ஜெமாஅத்” கடந்த வருடங்களில் மேற்கொண்ட பல பணிகளில் ஒரு சில

தரீக்கா பணிகள்:

சீனன்கோட்டை ஜும்மா பள்ளிவாசலிலும், மேற்படி பரிபாலன பிரிவினுல் உள்ள ஸாவியாக்களிலும் வாராந்த ஹழரா மஜ்லிசுகளை நடாத்தி வருகிறோம்.

1996ம் ஆண்டு சீனன்கோட்டை ஜும்ஆ மஸ்ஜிதில் நடைபெற்ற சாதுலியாதரீக்கா தேசிய மாநாட்டை சிறப்பாக நடைபெற வழிசெய்தோம். வெளியூர்களிலிருந்து உலமாக்களை வரவழைத்து அவ்வப்போது தரீக்கா பற்றிய விளக்கங்களைப் பொதுமக்களுக்கு பெற்று கொடுத்துள்ளோம்.

1983இல் சர்வதேச இளைஞர் ஆண்டில் தேசியமட்டத்தில் தரீக்கா பற்றிய இளைஞர் கருத்தரங்கொன்றினை ஏற்பாடு செய்து வெற்றிகரமாக செயல்படுத்துகிறோம்.

நாட்டில் நாளா பக்கங்களிலும் நடைபெற்றுவரும் சாதுலியா பயிற்சி மஜ்லிஸ் மனாகிபுஷ்ஷாதுலி மஜ்லிஸ் மற்றும் தரீக்காக்கள் சம்பந்தமான வைப்பவங்களிலும் எமது இயக்கம் பங்குபற்றியதொரு, தொடர்ந்து பங்கு பற்றிக் கொண்டு வருகிறோம்.

சீன்கோட்டை இஃவானுஷ்ஷாதுலியின்,அகில இலங்கை சாதுலியா இளைஞர் இயக்கம் சாதுலியா கவுன்ஸில் ஆகியவற்றோடு இணைந்து பல வேலைத் திட்டங்களை செயல்படுத்தினோம். இலங்கை இஹ்திஹாத் அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஅத்அமைப்போடும் இணைந்து பல வேலைத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.

சமயப்பணிகள்:

சீனன்கோட்டைப் பள்ளிப் பரிபாலன சபைப் பிரதேசத்தில் இயங்கிவரும் சகல குர்ஆன் மத்ரஸாக்களிலும் பயிலும் மாணவர்களிடையே கடந்த 46 வருடங்களாக மீலாத் போட்டிகளை நடாத்தி பரிசில்களும் வழங்கி வருகின்றது.

வெளிநாட்டு அறிஞர்களைக் கொண்டு சுன்னத் வல்ஜெமாத் அடிப்படையிலான சொற்பொழிவுகளை நிகழ்த்தியுள்ளோம்.

பதுறு சஹாபாக்கள் தினத்தையெட்டி விழாக்களை ஏற்பாடு செய்து, அவ்விழாக்களில் நாட்டின் தலை சிறந்த பேச்சாளர்களைக கொண்டு போதிய உரைகளைப் பெற்றுக் கொடுத்துள்ளோம்.

சேகுநாயகம் மர்ஹ{ம் முஹம்மது அல்பாஸி அல் மக்கி அஷ்ஷாதுலி (ரலி) அவர்களோடு தொடர்பு கொண்டு நாட்டின் நிலைமைகளையும் தரீக்காவின் நிலைமைகளையும் சுட்டிக்காட்டியதோடு அவர்கள் மூலம் பிரார்த்தனைகளையும் பெற்றுள்ளோம். மர்ஹூம் சேகு நாயகம் அப்துல் காதிர் அல்பாஸி அல்மக்கி அஷ்ஷாதுலி மர்ஹூம் சேஹ் அஜ்வா அல்பாஸி அல் மக்கி அஷ்ஷாதுலி ஆகியோருடன் தொடர்பை செயற்படுத்தி வைத்து வந்தோம் தற்போதைய சேகு நாயகம் மஹ்தி அப்துல்லா அல்பாஸி செய்ஹ் முஹம்மத் அஜ்வாத் அல் பாஸி ஆகியோருடன் நெருக்கமாக செயற்படுகிறோம்.

சமூகப்பணிகள்:

எமது இயக்கம் தனித்து நின்றும் ஏனைய சமூக நிறுவனங்களோடு இணைந்தும் ஊர்மட்டத்திலும், தேசிய மட்டத்திலும் பல சமூகப்பணிகளில் ஈடுபட்டுள்ளோம்.

ஏழைச் சிறுவர்களின் கத்னா வைபவங்கள் நடாத்தியமை வறியசிறார்களின் பாவனைக்காக சீருடை,காலணிகளை பெற்றுக்கொடுத்தமை,வறிய ஜனாஸாக்களின் நல்லடக்கத்துக்காக உதவியமை, ஏழை நோயாளர்களுக்கு உதவியமை, பள்ளிவாசல், ஸாவியாக்களின் உட்பல வேலைகளுக்கு உதவியமை போன்ற பணிகளைச் செய்தோம்.

சர்வதேச மட்டத்திலும் தேசிய மட்டத்திலும் முஸ்லிம் சமூகத்தோடு தொடர்புடைய தேவைகள் பிரச்சினைகள் எழுந்த போது வாழ்த்துக்கள் கூறியும் அறிக்கைகள் விடுத்தும், கண்டனக் குரல்களை எழுப்பியும் எமது சமூக உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளோம்.

கல்விப் பணிகள்:

அரபுக் கல்லூரிகளில் எமது ஊர் மாணவர்கள் உலமாக்களாகக் கற்க அனுமதி பெற்றுக் கொடுத்ததோடு உதவிகளும் வழங்கியுள்ளோம். இன்றும் மதரஸாக்களில் எமதூர் மாணவர்கள் ஓத உதவி வருகிறோம்.

சீனன்கோட்டை ஜாமிஅதுல் பாஸியா கலாபீடம் உருவாக ஹழரா ஜெமாஅத் காத்திரமான பங்களிப்பை செய்தது.

சீனன்கோட்டை அல்-ஹுமைஸரா தேசிய பாடசாலை, சீனன்கோட்டை நளீம் ஹாஜியார் முஸ்லிம் மகளிர் கல்லூரி, ஆரியவன்;ஸ மஹா வித்தியாலயம் மற்றும் பொல்கொடுவ ரோமன் கததோலிக்க மஹா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் கற்கும் வறிய மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகளை அன்பளித்ததோடு பாடசாலையில் நடைபெற்ற முக்கிய நிகழ்ச்சிகளுக்கு ஒத்துழைப்பும் வழங்கியுள்ளோம்.

சீனன்கோட்டை அல்-ஹுமைஸரா தேசிய பாடசாலை, பாடசாலை நூல் நிலையத்துக்கு ஒரு தொகை நூல்களை அன்பளித்தோம்.

சில காலமாக வளர்ந்தோருக்கு ஆங்கில வகுப்புக்களை நடத்தியதோடு மத்ரஸாக்களில் பயிலும் மாணவர்களுக்கு அஹதியா, அறபு, தஜ்வீத் வகுப்புக்களையும் நடத்தி வந்துள்ளோம்.

மத்ரஸா, பாடசாலை மாணவர்களுக்கு ஆன்மிக கல்வி கருத்தரங்கு மற்றும் தலைமைத்துவ பயிற்சிகளையும் நடத்தி வந்துள்ளோம்.

அல்-ஹுமைஸரா தேசிய பாடசாலையிலிருந்தும் சீனன்கோட்டை நளீம் ஹாஜியார் முஸ்லிம் மகளிர் கல்லூரியிருந்தும் பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவான மாணவ, மாணவியருக்குப் பாராட்டு விழாக்கள் நடத்தினோம்.

ஓய்வுபெற்ற அல்-ஹுமைஸரா தேசிய பாடசாலையின் பிரதி அதிபர் மர்ஹ_ம் அல்ஹாஜ் ஏ.எம்.எம். காஸிம் அவர்களுக்கு ஒரு சேவை நலன் பாறாட்டு விழா நடாத்தினோம்.

கோட்டை வாலிபர் ஹழரா ஜெமாஅத் சீனன்கோட்டை பள்ளி சங்கத்தின் அனுசரனையுடன் வருடாந்தம் நடாத்தி வரும் சீனன்கோட்டை குர்ஆன் மத்ரஸாக்களுக்கிடையிலான சன்மார்க்க போட்டிகளுடனான மீலாதுன் நபி விழா 2025.10.25 ம் திகதி நடைபெறும்

சீனன் கோட்டை பள்ளிச் சங்க இனைச்பணிக்கு சேர்ந்தார் செயலாளரும் அகில இலங்கை ஜெம்மியத்துல் உலமா சபையின் நிரைவேற்றுக் குழு உறுப்பினருமான கலீபதுஷ் ஷாதுலி அஷ் ஷேஹ் இஹ்ஸானுதீன் அபுல் ஹஸன் (நளீமி) யின் வழிகாட்டலின் கீழ் மாலை 3.30 அல் ஹுமைஸரா தேசிய பாடசாலை எஸ்.எம் ஜாபிர் ஹாஜியார் மண்டபத்தில் சீனன் கோட்டை பள்ளிச்சங்கத் தலைவர் அல் ஹாஜ் ஏ.எச்.எம் முக்தார தலைமையில் நடைபெறும்.

மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பின ரும் எரிசக்தி பிரதி அமைச்சருமான அர்கம் இல்யாஸ் பிரதம அதிதியாகவும், மலேசிய நாட்டின் இலங்கைத் தூதுவர் பத்லி ஹிஷாம் ஆதம் கௌரவ அதிதியாகவும், தேசபந்து டாக்டர் ரயீஸ் மீரா விஷேட அதிதியாகவும், சிறப்பு பேச்சாளராக மௌலவி எம்.எம்.அஸ்மீர் (ஹஸனி)யும் கலந்து கொள்வர். இவ்விழாவில் சீனன் கோட்டை அல் ஹுமைஸரா தேசிய பாடசாலை, நளீம் ஹாஜியார் மகளிர் கல்லூரி, சீனன் கோட்டை ஆரம்பப் பாடசாலை ஊரில் உள்ள சர்வதேச பாடசாலை மற்றும் வெளியூர் பாடசாலைகளில் கல்வி கற்று தேசிய பரீட்சைகளில் சித்தியடைந்த சீனன் கோட்டையைச் சேர்ந்த மாணவர்கள் கௌரவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சீனன் கோட்டை பள்ளிச்சங்க உறுப்பினர்கள், கலீபாக்கள், மூன்று பாடசாலைகளினதும் அதிபர்கள், வாலிபர் ஹழரா ஜமாஅத் தலைவர் உட்பட உறுப்பினர்கள், உலமாக்கள், பெற்றோர்கள், பிரமுகர்கள், பிரதேச அரசியல்வாதிகள், குர்ஆன் மத்ரஸா அதிபர்கள என பலரும் விழாவில் பங்குபற்றுவர்.

(பீ.எம். முக்தார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *