நெல்லையில் நடைபெற்ற தமிழர் கலைத் திருவிழா.

தமிழ்நாடு நெல்லை சாராள் தக்கர் மகளிர் மேல் நிலைப்பள்ளி அரங்கத்தில். உலகத் தமிழ் கலை பண்பாட்டு கூடத்தின் சார்பாக மாபெரும் தமிழர் கலைத்திருவிழா நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவிற்கு அமைப்பின் சர்வதேச தலைவர்.கலாநிதி. ரஸ்மி ரூமி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக இலங்கை பெருந்தோட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்கள் மாணவ மாணவிகளுக்கு மற்றும் பல்வேறு துறையைச் சார்ந்த சாதனையாளர்களுக்கு தமிழ் அறிஞர்களுக்கு விருதுகளை வழங்கி சிறப்பித்தார்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக திருநெல்வேலி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு ராபர்ட் புருஸ் M.P. மற்றும் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு அப்துல் வகாப் M.L.A மற்றும் தமிழ்நாடு அரசு சிறுபான்மை ஆணையத்தின் துணைத் தலைவர் கலைமாமணி டாக்டர் இறையன்பன் குத்தூஸ் மற்றும் ஐ என் டி சி தேசிய பொதுச்செயலாளர் டாக்டர் அமீர்கான் மற்றும் இஸ்லாமிய பாடகர் நெல்லை அபூபக்கர்.மற்றும் ஜபருல்லா ஆர் பாண்டியன் ரத்தினவேல்.பொருணை காஜா முகைதீன் வழக்கறிஞர் சுதர்சன் மீரான், முகைதின் ஷேக் மன்சூர்.எசபுல்லா செல்லகுமாரி காவல்துறை அதிகாரி பீர் முஹைதீன்.பரதநாட்டிய கலைஞர் கல்பனாசெங்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் டிவி ஜீவா.மற்றும் முக்கிய பிரமுகர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர் இந்த நிகழ்ச்சியில் இலங்கை அமைச்சர் அவர்களுக்கு உலகத் தமிழ் கலை பண்பாட்டு கூடத்தின் சார்பாக மலையக மக்களின் நம்பிக்கை நாயகன் என்ற விருது வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






