சிரேஷ்ட ஊடகவியலாளர் முதுவை ஹிதாயதுல்லாவுக்கு துபாயில் கெளரவம்.பஸ்ஹான் நவாஸும் கெளரவிக்கப்பட்டார்.

சிரேஷ்ட ஊடகவியலாளரும், புகழ்பெற்ற எழுத்தாளரும், இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம், இலங்கை ஆகிய நாடுகளின் ஊடக இணைப்பாளருமான முதுவை ஹிதாயத் ( K.முஹம்மத் ஹிதாயதுல்லாஹ்) அவர்களுக்கு UAE Golden Visa வழங்கப்பட்டதை கெளரவிக்கும் நிகழ்வு துபாயில் (இன்று) இடம்பெற்றது.
Anwer குழுமத்தின் நிர்வாக இயக்குனர் அன்வர்தீன் தலைமையில் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தொழில் அதிபர் V. கனகராஜா உட்பட அமீரகத்தின் உயர்நிலை வர்த்தகப் பிரமுகர்கள் பங்ககேற்றனர். கல்வியலாளர் முனைவர் லியாகத் அலியின் உரையும் இடம்பெற்றது .
சமூக சேவைக்கான Golden Visa வழங்கப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத் மற்றும் வியாபார துறைக்கான Golden Visa பெற்ற S.ராஜூவ் காந்தி ஆகியோர் இங்கு கௌரவிக்கப்பட்டனர். நிகழ்வில் அதிதியாகக் கலந்துகொண்ட இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் சிரேஷ்ட செய்தியாசிரியர் பஸ்ஹான் நவாஸும் நிகழ்வில் கௌரவிக்கப்பட்டார்.



