உள்நாடு

காலநிலை அபாயங்களை நிர்வகிப்பதற்கான நிதியளிப்பு நிகழ்வு

உலகளாவிய ரீதியில் காலநிலை நெருக்கடிகள் தீவிரமடைந்து வருவதால் இலங்கை போன்ற நாடுகளில் காலநிலை அபாயங்களை நிர்வகிப்பது நியாயமான மாற்றத்திற்கு நிதியளிப்பது இரட்டை சவாலை எதிர்கொள்கின்றன.

என்ற தலைப்பில் தேசிய காலநிலை நிதியளிப்பது சம்பந்தமான நிகழ்வு கொழும்பு மரியர்ட் ஹோட்டலில் நிதியமைச்சு, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம்,மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் இலங்கைக்கான தூதுவராலயம் ஆகியன இணைந்து இந்நிகழ்வினை 24.10.2025 வெள்ளிக்கிழமை நடாத்தியது.

இலங்கையின் காலநிலை தொடர்பான சேதங்கள் ஆண்டுதோறும் LKR 50 பில்லியனைத் தாண்டியது காலநிலை நடவடிக்கைகளுக்கு நிதி அளிப்பது இலங்கையின் வளர்ச்சி நிகழ்ச்சி நிரலின் மையமாகும்.

ஐக்கிய இராச்சிய அரசாங்கத்தால் நிதி அளிக்கப்பட்ட காலநிலை நிதி வலையமைப்பு திட்டத்தின் மூலம், ஐக்கிய நாடுகளின் நிகழ்ச்சி திட்டத்துடன் இணைந்து நிதி அமைச்சினால் இத் திட்டம் வழி நடத்தப்படுகிறது,
இலங்கையின் தேசிய காலநிலை நிதி உத்தி 2025 – 2030′ என்பது, காலநிலை முதலீடுகளை திறம்பட மேம்படுத்துவதற்கும், வழிநடத்துவதற்கு ஒரு விரிவான வழிகாட்டுதலை வழங்குகிறது, இது இலங்கையின் கார்பன் நிகர பூஜ்ஜிய பாதைக்கு மாறுவதை ஆதரிக்கிறது.

சர்வதேச காலநிலை நடவடிக்கை தினத்தில் தொடங்கப்பட்ட இந்த திட்டம் , மூலோபாய நிதி திட்டமிடல் மூலம் காலநிலை மீள்தன்மை மற்றும் நிலையான வளர்ச்சியை விரைவு படுத்துவதற்கான இலங்கையின் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

இந்த திட்டத்தை அறிமுகப்படுத்திய நிகழ்வில் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சின் செயலாளர் டாக்டர் ஹர்ஷனா சூரியப்பெரும
இலங்கையின் UNDP வதிவிடப் பிரதிநிதி திருமதி அசுசா குபோடா, இலங்கைக்கான பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகராலயத்தின் உயர்ஸ்தானிகர் அன்று பட்றிக் இலங்கை மத்திய வங்கி ஆளுநர், நிதி அமைச்சின் மேலதிக செயலாளர் , நிதி அமைச்சின் பணிப்பாளர் சமந்த பண்டார ஆகியோர்கள் கலந்து கொண்டு மேற்படி திட்டத்தை ஆரம்பித்து வைத்தனர் .

அத்துடன் இத்துறை சம்பந்தப்பட்ட நிபுணர்கள் தலைமையில் கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றது இந் நிகழ்வில் சம்பந்தப்பட்ட துறையினர் களும் கலந்து கொண்டனர்.

(அஷ்ரப் ஏ சமத்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *