பாடசாலை நேர நீடிப்பு வேண்டாம்; போராட்டத்தில் குதிக்கும் அதிபர், ஆசிரியர்கள்
2026 ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வரவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ், பாடசாலை நேரத்தை 30 நிமிடங்கள் நீடிக்கும் அரசாங்கத்தின் முடிவை ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் தொழிற்சங்க கூட்டணி கடுமையாக எதிர்த்துள்ளது.
கொழும்பில் இன்று (24) செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய தொழிற்சங்க பிரதிநிதிகள், நவம்பர் 7 ஆம் திகதிக்கு முன்னர் அதிகாரிகள் முடிவை திருத்தத் தவறினால், வரவிருக்கும் பாடசாலை பருவத்தின் தொடக்கத்தில் ஒரு நாள் வேலைநிறுத்தத்தைத் தொடங்குவோம் என்று எச்சரித்தனர்.
இப் கல்வியாளர்களுடன் முறையான ஆலோசனை இல்லாமல் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தொழிற்சங்கத் தலைவர்கள் தெரிவித்துள்ளதோடு , மேலும் நீடிக்கப்பட்ட நேரம் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இருவருக்கும் கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளனர்.
ஆசிரியர்களின் பிரச்சினைகளை தொடர்ந்து புறக்கணிப்பது கல்வித் துறையில் பரந்த தொழிற்சங்க நடவடிக்கைக்கு வழிவகுக்கும் என்று எச்சரித்த அவர்கள், இந்த நடவடிக்கையை மறுபரிசீலனை செய்யுமாறும் தொடர்புடையவர்களுடன் கலந்துரையாடல்களில் ஈடுபடவும் கல்வி அமைச்சிடம் வலியுறுத்தினர்.
