சட்டத்தரணி வைஸ் காலமானார்
எழுத்தாளரும், பத்திரிகையாளருமான கண்டி, உடத்தலவின்னையைச் சேர்ந்த சட்டத்தரணி ஏ.எம். வைஸ் நேற்று (22) காலமானார்.
இவர் ஶ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் சிரேஷ்ட உறுப்பினராகவும், சட்ட ஆலோசகராகவும் பங்களிப்பாறியவராவார்.
பேராதனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமான அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று (23) மதியம் 12 மணிக்கு கலதெனிய ஜும்ஆ மஸ்ஜித் மைவாடியில் இடம்பெறும்.
(ரஷீத் எம். றியாழ்)