மாகொல முஸ்லிம் அநாதைகள் இல்லத்துக்கு புதிய மாணவர்களை சேர்க்க விண்னப்பம் கோரல்
மாகொல முஸ்லிம் அநாதைகள் இல்லத்துக்கு மார்க்கக் கல்வி மற்றும் பாடசாலை கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் புதிய மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்பட்வுள்ளனர். இதற்கான விண்ணப்பம் மாகொல முஸ்லிம் அநாதைகள் இல்லத்தினால் கோரப்பட்டுள்ளன.
தந்தையை இழந்த ஆறு முதல் 12 வயது வரையிலான ஆண் சிறுவர்கள் இது தொடர்பில் விண்ணப்பிக்க முடியும் என மாகொல முஸ்லிம் அநாதை இல்லம் அறிவித்துள்ளது.
மார்க்கக் கல்வி தொடர்பில் அன்வாருல் உலூம் அரபுக் கல்லூரியில் குர் ஆன் மனனம் ( ஹிப்ழ்), மெளலவி மற்றும் அல் ஆலிம் சான்றிதழ் கற்கை நெறியுடன் கல்விப் பொதுத்தராதர சாதாரண தர மற்றும் உயர் தரம் கற்பிக்கப்படும் என அந்த நிலையம் அறிவித்துள்ளது.
பாடசாலை கல்விப் பிரிவில், அரச பாடத்திட்டத்துக்கு அமைய தரம் 1 முதல் சாதாரண தரம் மற்றும் உயர் தரம் வரையில் தமிழ் மற்றும் ஆங்கில மொழி மூலம் கற்பிக்கப்படும் என அந்த நிலையம் அறிவித்துள்ளது.
இதனைவிட ஆன்மீக வழிகாட்டல் தகவல் தொழில் நுட்ப அறிவு, மின் இணைப்பு, பிளம்பிங் போன்ற துறைகளின் அறிவு ஆகியன பொருத்தமான மாணவர்களுக்கு கிடைக்கும் வண்னம் கல்வி நடவடிக்கைகள் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன் சிறுவர்களை அன்பாகவும் தன்னம்பிக்கையோடும் வளர்க்கும் பாதுகாப்பான சூழலை அந்த நிலையம் கொண்டுள்ளது.
கடந்த 63 ஆண்டுகளாக அநாதை சிறுவர்களின் நலனுக்காக உழைக்கும் இந்த நிறுவனம் புதிய திட்டங்களோடு இம்முறை மாணவர்களை சேர்த்துக்கொள்ளவுள்ளது.