சீனன் கோட்டை வாலிபர் ஹழரா ஜமாஅத்தின் ஏற்பாட்டில் 46 ஆவது வருட மீலாத் பரிசளிப்பு விழா எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறும்
பேருவளை சீனன் கோட்டை வாலிபர் ஹழரா ஜெமாஅத் சீனன்கோட்டை பள்ளி சங்கத்தின் அனுசரனையுடன் வருடாந்தம் நடாத்தி வரும் சீனன்கோட்டை குர்ஆன் மத்ரஸாக்களுக்கிடையிலான சன்மார்க்க போட்டிகளுடனான மீலாதுன் நபி விழா சீனன் கோட்டை பள்ளிச் சங்க இனைச் செயலாளரும் அகில இலங்கை ஜெம்மியத்துல் உலமா சபையின் நிரைவேற்றுக் குழு உறுப்பினருமான கலீபதுஷ் ஷாதுலி அல்ஹாஜ் அஷ் ஷேஹ் இஹ்ஸானுதீன் அபுல் ஹஸன் (நளீமி) யின் வழிகாட்டலின் கீழ் எதிர்வரும் 25.10.2025 சனிக்கிழமை மாலை மதியம் 1.30 மணிக்கு முதலாவது அமர்வும் மாலை 3.30 மணிக்கு இரண்டாவது பிரதான விழாவும் அல் ஹுமைஸரா தேசிய பாடசாலை எஸ்.எம் ஜாபிர் ஹாஜியார் மண்டபத்தில் சீனன் கோட்டை பள்ளிச்சங்கத் தலைவர் அல் ஹாஜ் ஏ.எச்.எம் முக்தார் தலைமையில் நடைபெறும்.
மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் எரிசக்தி பிரதி அமைச்சருமான அர்கம் இல்யாஸ் பிரதம அதிதியாகவும் மலேசிய நாட்டின் இலங்கைத் தூதுவர் பத்லி ஹிஷாம் ஆதம் கௌரவ அதிதியாகவும் தேசபந்து டாக்டர் ரயீஸ் மீரா விஷேட அதிதியாகவும் சிறப்பு பேச்சாளராக மௌலவி எம்.எம்.அஸ்மீர் (ஹஸனி)யும் கலந்து கொள்வர்.
குர்ஆன் மத்ரஸாக்களுக்கு இடையிலான சன்மார்க்க அறிவுப் போட்டிகள் 11 ஆம் திகதி இதே பாடசாலையில் நடைபெற்றது கிராத் மனனம்,கஸீதா,கஸீதாஇறைதூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் பற்றிய பேச்சு,தரீக்கா பற்றிய பேச்சு,கேள்வி-பதில்,மணிமொழி,சாதுலிய்யா ஹழரா பைத் உட்பட 30 வகையான சன்மார்க்க போட்டி நிகழ்ச்சிகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
சீனன் கோட்டை பள்ளிச் சங்க இனைச் செயலாளரும் அகில இலங்கை ஜெம்மியத்துல் உலமா சபையின் நிரைவேற்றுக் குழு உறுப்பினருமான கலீபதுஷ் ஷாதுலி அஷ் ஷேஹ் இஹ்ஸானுதீன் அபுல் ஹஸன் (நளீமி) தலைமையில் போட்டி நிகழ்ச்சிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இவ்விழாவில் சீனன் கோட்டை அல் ஹுமைஸரா தேசிய பாடசாலை, நளீம் ஹாஜியார் மகளிர் கல்லூரி, சீனன் கோட்டை ஆரம்பப் பாடசாலை ஊரில் உள்ள சர்வதேச பாடசாலை மற்றும் வெளியூர் பாடசாலைகளில் கல்வி கற்று தேசிய பரீட்சைகளில் சித்தியடைந்த சீனன் கோட்டையைச் சேர்ந்த மாணவ,மாணவிகள் கௌரவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சீனன் கோட்டை பள்ளிச்சங்க உறுப்பினர்கள், கலீபாக்கள், மூன்று பாடசாலைகளினதும் அதிபர்கள், உட்பட உலமாக்கள், பெற்றோர்கள், பிரமுகர்கள், பிரதேச அரசியல்வாதிகள், குர்ஆன் மத்ரஸா அதிபர்கள என பலரும் விழாவில் பங்குபற்றுவார்கள் என வாழிபர் ஹழரா ஜெமா அத் இணைச் செயளாலர் யூனுஸ் யுஸ்ரி தெரிவித்தார்.
(பீ.எம். முக்தார்)