சிறப்பாக இடம்பெற்ற அகில இலங்கை வை. எம்.எம் .ஏ இன் 75ஆவது வருட பூர்த்தி நிகழ்வு
அகில இலங்கை வை. எம். எம் .ஏ இன் 75 ஆவது வருட பூர்த்தியை முன்னிட்டு கொழும்பு மென்டரினா ஹோட்டலில் அதன் தலைவர் அம்ஹர் ஏ ஷரீப் அவர்களின் தலைமையில் வை.எம் .எம் .ஏ .இன் வருடாந்த நிகழ்வு நடைபெற்றது.
இதில் பிரதம அதிதியாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள் கலந்து சிறப்பித்தார். இதில் நடைபெற்ற ஆளுமைகளுக்கான விருது வழங்களில் கேகாலை மாவட்ட உயன்வத்தை வை .எம். எம் .ஏ .இன் தலைவர் எம். எஸ். எம். தாரிக் மற்றும் செயலாளர் எம். ஆர். எம் ரிப்கான் ஆகியோர் வை.எம். எம்.ஏ.இன் ஆரம்ப பாடசாலைக்கான சிறந்த விருதினையும்,
சிறந்த வேலைத்திட்டத்திற்கான விருதுகளையும் பெற்றுக் கொண்டதோடு,கேகாலை மாவட்ட முன்னாள் வை.எம் .எம். ஏ .பணிப்பாளர் எம்.கே.ஏ லுக்மான் அவர்கள் தனது 15 வருட தனது சேவைக்கான விருதினையும்,மாவனல்லை வை.எம். எம் .ஏ தலைவர் ஏ.கே.எம் பைஸல் குழுவினரும் தனக்குரிய சிறப்பு விருதினையும் இவ் நிகழ்வில் பெற்றுக் கொண்டனர்.
(பாரா தாஹீர்- மாவனல்லை செய்தியாளர்)