வெயங்கல்ல முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் மாணவர் தலைவர்கள் சின்னம் அணிவிக்கும் நிகழ்வு
மேல் மாகாணம் அகலவத்தை, வெயங்கல்ல முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் மாணவர் தலைவர்களுக்கான சின்னம் அணிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
ஹொரண கல்வி வலயத்திற்குட்பட்ட வெய்யங்கல்ல முஸ்லிம் மஹா வித்தியாலயத்தின், 2025 ஆம் ஆண்டுக்கான மாணவர் தலைவர்களுக்கான சின்னம் அணிவிக்கும் நிகழ்வு பாடசாலையின் கேட்போர் கூடத்தில் சிறப்பாக நடைபெற்றது.
பாடசாலை அதிபர் ராஜேஷ் குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு, ஜே.எம். மீடியா நிறுவனத்தின் தலைவரும், ஊடகவியலாளருமான, சட்டமாணி ராஷிட் மல்ஹர்டீன் கௌரவ அதிதியாக கலந்துகொண்டார்.
மாணவர்களின் எதிர்காலம் மற்றும் தலைமைத்துவம் குறித்த பெறுமதிமிக்க வழிகாட்டுதல்களை உள்ளடக்கிய சிறப்புரையையும் சட்டமாணி ராஷிட் மல்ஹர்டீன் வழங்கினார்.
மேலும் அகலவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உரையாற்றும் போது போதையற்ற பிரதேசத்தை உருவாக்குவதற்கு தங்களால் முடிந்த உதவியை வழங்குமாறு கேட்டுக் கொண்டார்.
பாடசாலையின் புதிய மாணவர் தலைவர்கள் தங்கள் பதவிகளுக்கான கடமைகளையும் பொறுப்புகளையும் ஏற்று, உத்தியோகபூர்வமாக உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
இந்த நிகழ்வானது, பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பாடசாலை மேம்பாட்டுக் கல்விக் குழுவினர் ஆகியோரின் கூட்டு முயற்சியில், திட்டமிடப்பட்டு ஒழுங்கமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.






(றிஹ்மி ஹக்கீம்)