புத்தளம் பெரிய பள்ளியில் விஷேட விழிப்பூட்டல் நிகழ்வு
புத்தளம் தள வைத்தியசாலையில் நிகழும் மரணங்கள் தொடர்பான, நாட்டின் சட்டம் மற்றும் வைத்தியசாலையின் நடைமுறைகளை தெளிவு படுத்தும் விஷேட விழிப்பூட்டல் நிகழ்வு ஒன்று அண்மையில் புத்தளம் பெரிய பள்ளியில் இடம்பெற்றது.
இந்நிகழ்வின் வளவாளர்களாக புத்தளம் தள வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் பிரசன்ன அப்புஹாமி, வைத்தியர் முஷ்ரப், வைத்தியர் ஹனான் அஹ்மத் ஆகியோர் வருகை தந்திருந்தனர்.
இந்நிகழ்வில் மஸ்ஜித் நிர்வாகிகள், உலமாக்கள், சிவில் அமைப்புக்கள், ஜனாஸா சங்கங்கள், அரசியல் பிரமுகர்கள், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், திடீர் மரண விசாரணை அதிகாரிகள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டதோடு பெண்களுக்கான விஷேட ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன
இவ்விஷேட விழிப்பூட்டல் நிகழ்வை முக்கூட்டு தலைமைகளான புத்தளம் பெரிய பள்ளி, ஜம்இய்யதுல் உலமா புத்தளம் கிளை, புத்தளம் மாநகர சபை மற்றும் பிரதேச ஜனாஸா சங்கங்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.




(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)