புத்தளம் நல்லாந்தழுவை முஸ்லிம் ஆரம்ப பாடசாலையில் புலமைப் பரீட்சையில் மேலும் ஒரு மாணவி சித்தி
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளின் மீளாய்வு வெளியாகியுள்ள நிலையில் புத்தளம் நல்லாந்தழுவை முஸ்லிம் ஆரம்ப பாடசாலையில் மேலும் ஒரு மாணவிவெட்டுப் புள்ளியைப் பெற்று சித்தியடைந்துள்ளார்.
பாரூக் சேஹா மனால் என்ற மாணவி 2025ம் ஆண்டு தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையின் மீளாய்வு பெறுபேற்றின் மூலம் 132 புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்து பாடசாலைக்கு மேலும் பெருமை சேர்த்துள்ளதாக பாடசாலையின் அதிபர் எம். வை. ஹுதைபா தெரிவித்தார்.
2025 தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் ஏற்கனவே பதினான்கு மாணவர்கள் சித்தியடைந்திருந்த நிலையில் இந்த மாணவியின் சித்தியுடன் புத்தளம் நல்லாந்தழுவை முஸ்லிம் ஆரம்ப பாடசாலையில் பதினைந்து மாணவர்கள் வெட்டு புள்ளிகளுக்கு மேல் பெற்று புத்தளம் தெற்கு கோட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)