செய்தி வாசிப்புப் போட்டியில் பேருவளைச் செல்வி ஆர்.எப். ரிபாதா முதலாம் இடம்
“அறிவு ஏந்தி ஊடகத்துறையை வளமாக்குவோம்” எனும் தொனிப்பொருளில்,
“ஸ்கை லைன்” நிறுவனத்தின் அனுசரணையில், குருநாகலில் அமைந்துள்ள வட மேல் மாகாண சபை கேட்போர் கூடத்தில் அண்மையில் இடம்பெற்ற விருது வழங்கும் விழாவில், பேருவளையைச் சேர்ந்த “சோசியல் டிவி” செய்தி வாசிப்பாளரும், இளம் கவிதாயினியும், இளம் மாணவியுமான ரிபாதா ரிப்கான், செய்தி வாசிப்புப் போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்று, பேருவளை மண்ணுக்கு பெருமை சேர்த்துள்ளார்.
இச்சிறப்பு நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக எல்.என். மீடியா நெட்வோர்க் உரிமையாளர்கள், மகாராஜா – சக்தி மற்றும் சிரச ஊடகப் பிரதிநிதிகள், சர்வதேச மனித உரிமைகளின் உலகளாவிய பணிக்குழு உறுப்பினர் ஏ.டி.யூ.எம். பஸ்லான், டாக்டர் ருஷீனா ஜவாஹிர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலர் பங்கேற்றிருந்தனர்.
இம்மாபெரும் விழாவில் விருது, நினைவுச் சின்னம் மற்றும் சான்றிதழ் பெற்றுள்ள இம் மாணவி, பேருவளையைச் சேர்ந்த ரிப்கான் – பாத்திமா பிரோஸா தம்பதியினரின் புதல்வியாவார்.


( ஐ. ஏ. காதிர் கான் )