அ.இ. ஹஜ் பயண முகவர் சங்கத் தலைவராக முஹம்மத் ஹாஜி
அகில இலங்கை ஹஜ் பயண முகவர்கள் சங்கத்தின் புதிய தலைவராக முஹம்மத் ஹாஜி தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
சுமார் 28 அனுமதிப் பத்திரங்களைப் பெற்ற ஹஜ் பயண முகவர் நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அகில இலங்கை ஹஜ் பயண நிறுவனர் சங்கத்தின் (ACHTOA) 2025 / 2026 ஆண்டுக்கான புதிய நிர்வாகக் குழுவை தெரிவுசெய்வதற்கான வருடாந்த பொதுக் கூட்டம் (AGM) நேற்று திங்கட்கிழமை (20) கொழும்பு மெண்டரினா ஹோட்டலில் முன்னாள் தலைவர் எம்.ஆர்.எம்.றிஸ்மி றியால் (த ரவலர் குலோபல் ஹஜ் முகவர் நிறுவனத்தின் உரிமையாளர்) தலைமையில் நடைபெற்றது
இதன்போதே அடுத்த புதிய ஆண்டுக்கான புதிய தலைவராக என்.எம்.ட்ரவல்ஸ் அன் டூவர்ஸ் ஹஜ் முகவர் நிறுவனத்தின் உரிமையாளர் எம்.எஸ்.எச். முஹம்மத் ஹாஜி தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
இதன்போது புதிய நிருவாகிகளாக பின்வருவோர் தெரிவு செய்யப்பட்டனர்.
- பொதுச் செயலாளராக ஹாதி ட்ரவல்ஸ் பிறைவேட் லிமிடட்டின் சுபைர் எம் நூர்டீன்
- துணைத் தலைவராக ஹன்சுல்லாஹ் ஹஜ் ட்ரவல்ஸ் நிறுவனத்தின் மௌலவி யு.எல். உபைது
- பொருலாளராக எஜின்வெக் ட்ரவல்ஸ் நிறுவனத்தின் எம்.எம்.எம்.ஹரீஸ் ஆகியோரும்
நிருவாக சபை உறுப்பினர்களாக.
- அல் ஸபா ட்ரவல்ஸ் அன் டூவர்ஸ் பிறைவேட் லிமிட்டட் எப்.உமர் நிஸ்ஹாத்
- யாரா ட்ரவல்ஸ் பிறைவேட் லிமிட்டட் எஸ்எம்.ஏ.ஸானாஸ்
- றோயல் பாத்திமா ட்ரவல்ஸ் எம்.எஸ்.எம்.ஸபாஅத்
- ஹம்டான்ஸ் பிறைவேட் லிமிட்டட் எம்.ஆர்.எம்.பாஹிம் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.
இதன்போது முன்னாள் தலைவர் எம்.ஆர்.எம்.றிஸ்மி றியால் கருத்து தெரிவிக்கையில்
2019–2025 காலத்தில் தாம் வகித்த தலைமைப்பணிக்கான சிறப்புரிமையாக சங்கத்தின் சட்டத்தின் அடிப்படையில் நடப்பாண்டு முன்னைய தலைவர் (Immediate Past President) என்ற பதவி நிலையோடு புதிய நிர்வாக குழுவோடு செயற்படுவார் என்றார்.
புதிய தலைவர் எம்.எஸ்.எச். முஹம்மத் ஹாஜி கருத்து தெரிவிக்கையில் இலங்கை ஹஜ் தொடர்பான அதிகாரம் படைத்தவர்களோடு ஒற்றுமையை வலுப்படுத்தி தெளிவான மற்றும் நடைமுறைகளுக்கேற்ப ஹஜ் நெறிமுறைகளை உறுதிப்படுத்துவதே எங்கள் முன்னுரிமை” என தெரிவித்தார்.
பொது செயலாளர் சுபைர் எம் நூர்டீன் கூறுகையில்
எமது 28 உறுப்பினர்கள் மட்டுமல்லாது அனைத்து முகவர்களுகளினதும் புனித பயணிகளினதும் உரிமைகளை பாதுகாப்பதில் உறுதியாக செயல்படுவோம். அதற்கமைவாக வரவிருக்கும் ஹஜ் சட்டத்தின் (Hajj Act) கீழ் நியாயமான மற்றும் நடைமுறைபூர்வமான விதிகளைக் கொண்டுவர அனைத்து தொடர்புடைய அமைப்புகளும் இணைந்து செயல்படுவது அவசியம். ACHTOA மற்றும் நமது சக சங்கமான HTOASL இரண்டும் இந்தத் துறையில் அனுபவமும் திறனும் கொண்டவை என்பதால் அந்த சமூக பொறுப்பை ஒரே குரலில் நின்று சத்தியப்படுத்தி செயல்படுவார்கள் என்று நான் நம்புகிறேன் என்றார்.




(ஏ.எஸ்.எம்.ஜாவித்)