விளையாட்டு

பாகிஸ்தான் ஒருநாள் அணியின் தலைவராக அப்ரிடி நியமனம்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஒருநாள் தொடருக்கான புதிய தலைவராக வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் ஷா அப்ரிடி நியமிக்கபட்டுள்ளார். 

மொஹமட் ரிஸ்வான் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு ஷஹீன் ஷா அப்ரிடிக்கு புதிய தலைவர் பதவியை வழங்க பாகிஸ்தான் கிரிக்கெட் சபை நேற்று அறிவித்திருந்தது.

இஸ்லாமாபாத்தில் நடந்த தேசிய தேர்வுக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

ஷஹீன் ஷா அப்ரிடியின் பதவிக்காலம் நவம்பர் மாதம் நடைபெற உள்ள தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து ஆரம்பமாக உள்ளது. 

இவர் ஏற்கனவே பாகிஸ்தான் இருபதுக்கு 20 அணியின் தலைவராக செயல்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *