சீரற்ற வானிலை; இருவர் பலி
நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்தும் கன மழை பெய்து வருகிறது. இதனால் கொழும்பில் சில வீதிகளில் வெள்ளநீர் தேங்கி, கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
அத்துடன் பலத்த மழையினால் ஏற்படும் விபத்துக்களை தவிர்ப்பதற்கு சாரதிகள் அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சீரற்ற வானிலை காரணமாக இரண்டு உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதுடன் 144 குடும்பங்களைச் சேர்ந்த 585 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும் இன்று முதல் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.