உள்நாடு

ஊடகவியலாளர் ரஸீன் ரஸ்மின் கௌரவிக்கப்பட்டார்

சமூக சேவைக்கான சிறந்த பங்களிப்பை ஆற்றிவரும் புத்தளத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் ரஸீன் ரஸ்மின் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

புத்தளம் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 618 பி ரத்மல்யாய கிராம சேவகர் பிரிவில் உள்ள சாதனையாளர்கள், சமூக சேவையாளர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வொன்று ஞாயிற்றுக்கிழமை (19) ரத்மல்யாய அஸ்னா வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றபோதே இவர் கௌரவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிகழ்வில் சர்வதேச மற்றும் தேசிய ரீதியில் சாதனை படைத்த மாணவர்கள், 2020 – 2023 ஆண்டு காலப் பகுதியில் பல்கலைக்கழகம் சென்ற மாணவர்கள்,
சாதாரண தரப் பரீட்சை சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள், ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையல் சித்திபெற்ற மாணவர்கள்,
சமூக சேவையாளர்கள், சமூக சேவை கழகங்கள்
மற்றும் உலமாக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் பாராட்டி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

சுமார் 15 வருடங்களுக்கு மேல் புத்தளத்தில் அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் பிராந்திய ஊடகவியலாளராக பணிபுரிந்து வரும் ரஸீன் ரஸ்மின் புத்தளம் ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் (பூஜா) தலைவரும், அகில இலங்கை சமாதான நீதவானும் ஆவார்.

(எம்.யூ.எம்.சனூன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *