பேருவளை கெச்சிமலை தர்காவில் புனித புஹாரி மஜ்லிஸ் ஆரம்ப நிகழ்வு
வரலாற்று பிரசித்தி பெற்ற பேருவளை கெச்சிமலை தர்ஹாவில் நடைபெற்று வரும் வருடாந்த புனித ஸஹீஹல் புஹாரி, ஸஹீஹல் முஸ்லிம் மற்றும் மஷ்ரவுர்ரவி ஆகிய ஹதீஸ் கிரந்தங்களின் பராயன மஜ்லிஸின் ஆரம்ப வைபவம் இன்று 20 ஆம் திகதி திங்கட் கிழமை அதிகாலை 4 மணியளவில் ஆரம்பித்திருந்தது.
சங்கைக்குறிய அஷ் ஷெய்ஹ் மௌலவி ஸக்கி அஹமத் (அஷ்ரபி) பின் அஷ் ஷெய் முஹம்மத் காலிப் அலவி ஆலிம்; அலவியதுல் காதிரி தலைமையில் ஆரம்பமாகியிருக்கும் இப்புனித மஜ்லிஸில் மார்க்க அறிஞர்கள், உலமாக்கள், முரீதீன்களின் பங்குபற்றியுள்ளனர்.
வெள்ளிக்கிழமை தவிர ஏனைய நாட்களில் கதீஸ் பராயனம் மற்றும் மார்க்ச்சொற்பொழிவு இடம்பெறுவதோடு நவம்பர் 23 ஆம் திகதி (23.11.2025) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் தமாம் நிகழ்வு இடம்பெறும்.
22 ஆம் திகதி சனிக்கிழமை (22.11.2025) இரவு கத்தாத் ராதிப், விஷேட மார்க்கச் சொற்பொழிவு அதனையடுத்து தர்காவில் அடங்கப்பட்டுள்ள அஷ் ஷெய்க் அஷ்ரப் வலியுல்லாஹ் (ரஹ்) அவர்களின் ஸியாரத் நிகழ்ச்சியும் இடம்பெறும்.
23ஆம் திகதி அதிகாலை அல் குர்ஆன் தமாம் வைபவம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமாம் நிகழ்ச்சிகளை டிசம்பர் மாதம் 23 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இலங்கைவானொலி முஸ்லிம் சேவை 74 ஆவது வருடமாகவும் நேரடியாக அஞ்சல் செய்யவுள்ளது.
தமாம் வைபவத்தில் தரீக்காக்களின் இஹ்வான்கள் நாட்டின் பல பகுதிகளைச் சேர்ந்த முஸ்லிம் சகோதரர்கள் கலந்து கொள்வர். நவம்பர் 22 ஆம் 23 ஆம் திகதிகளில் மேற்படி தர்காவுக்கு பெண்கள் வருவது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது. பெரிய கந்தூரி தமாம் நிகழ்வில் பங்குபற்றும் மக்களின் பாதுகாப்புக் கருதி பேருவளை பொலீஸார் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வர்.
(பேருவளை .பீ.எம். முக்தார்)