புத்தளம் மாவட்டத்தில் கலாதினி விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட இரு ஊடகவியலாளர்கள்
புத்தளம் மாவட்ட வருடாந்த இலக்கிய விழா தம்பபன்னி அக்வெஸ்ஸ எனும் கருப்பொருளில் வெள்ளிக்கிழமை (17) மஹாவெவ முத்ராதேவி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கயான் ஜானக மற்றும் புத்தளம் மேலதிக மாவட்ட செயலாளர் புபுத்திகா எஸ்.பண்டார தலைமையில் இவ் இலக்கிய விழா நடைபெற்றது.
இந்த இலக்கிய விழாவில் புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்த 10 கலைஞர்களுக்கு கலாதினி விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.
இதில் புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்களான எஸ்.மகாதேவன் மற்றும் ஜயரத்ன விக்கிரமாராச்சி ஆகிய இருவருக்கும் குறித்த கலாதினி விருது வழங்கி கெளரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)