கண்டி அந்தோனியார் கல்லூரியின் இஸ்லாமிய மஜ்லிஸ் 50 ஆண்டு நிறைவை முன்னிட்டு போட்டி நிகழ்ச்சிகள்
கண்டி புனித அந்தோனியார் கல்லூரியின் இஸ்லாமிய மஜ்லிஸ் 50 ஆண்டு நிறைவை முன்னிட்டு பாடசாலை மாணவர்களுக்கிடையிலான இஸ்லாமிய சன்மார்க்க போட்டி நிகழ்ச்சிகள் பலவற்றை நாளை திங்கட்கிழமை (20) நடாத்தவுள்ளதுடன், இதில்
கண்டி சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த சுமார் 600 மாணவர்கள் பங்குபற்றும் இந்நிகழ்ச்சிகள்
கல்லூரியின் இஸ்லாமிய மஜ்லிஸின் தலைவர் முஹம்மத் ரைஹான் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்ச்சிகளை இஸ்லாமிய மஜ்லிஸின் செயலாளர் றிஜாஸ் றியாழ் நெறிப்படுத்தியுள்ளார்.
கிராஅத், அதான், கஸீதா, பேச்சு, அரபு எழுத்தணிக்கலை மற்றும் கட்டுரை முதலான பல போட்டிகளும் இங்கு இடம்பெறவுள்ளது.
இஸ்லாமிய மாணவர்களின் பல்வேறு திறமைகளையும் ஆளுமையையும் வளர்க்கும் வகையிலும் சன்மார்க்க விழுமியங்களை பேணி நடக்கும் வகையிலுமே இந்த நிகழ்ச்சிகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக இஸ்லாமிய மஜ்லிஸ் பொறுப்பாசிரியை எச். எப். மஸ்மியா தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சிகளின் பரிசளிப்பு விழாவை எதிர்வரும் டிசம்பர் மாத இறுதிப் பகுதியில் வெகு விமரிசையாக நடாத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
(ரஷீத் எம். றியாழ்)