இந்திய விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் பிரதமர்
இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, தமது விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பியுள்ளார்.
பிரதமர் நேற்று (18) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக விமான நிலையத்திற்கான “அத தெரண” செய்தியாளர் தெரிவித்தார்.
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கடந்த 16 ஆம் திகதி உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியாவிற்கு புறப்பட்டுச் சென்றிருந்தார்.
பிரதமர் தனது விஜயத்தின் போது, இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நாட்டின் உயர்மட்டத் தலைவர்களுடன் கலந்துரையாடினார்.
பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய “Edge of the Unknown: Risk. Resolve. Renewal.” என்ற கருப்பொருளின் கீழ் புது டில்லியில் நடைபெற்ற NDTV உலக உச்சி மாநாடு 2025 இல் கலந்துகொண்டு, “Steering Change in Uncertain Times,” என்ற கருப்பொருளின் கீழ் சிறப்புரை நிகழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.