உள்நாடு

பல அரச நிறுவனங்களின் இணைய சேவைகள் செயலிழப்பு

இலங்கை அரச கிளவுட் (Lanka Government Cloud – LGC) சேவையில் ஏற்பட்ட ஒரு செயலிழப்பு காரணமாக, பல அரச நிறுவனங்களால் இயக்கப்படும் இணைய சேவைகளில் தற்காலிக இடையூறுகள் தொடர்வதாக இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இந்த இடையூறுகளில் இருந்து உடனடியாக மீட்டெடுக்க பொறியாளர்கள் மற்றும் சேவை வழங்குநர்களின் கூட்டுக் குழு 24 மணிநேரமும் பணியாற்றி வருவதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது. 

எவ்வாறாயினும் இந்த சம்பவத்தால் எந்த தரவு இழப்பு அல்லது பாதுகாப்பு வழிமுறைகளும் பாதிக்கப்படவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

தரவுகள் தொடர்ந்தும் பாதுகாப்புடன் உள்ளதாகவும் இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவை நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. 

இதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமத்தைக் குறைப்பதற்காக பிரதேச செயலகங்கள் ஊடாக சான்றிதழ்களின் நகல்களைப் பெறுவது உள்ள தாக்கம் செலுத்தக்கூடிய சேவைகளுக்கான மாற்றி வழிமுறைகள் பின்பற்றப்பட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது. 

இந்தச் சேவைகளில் பதிவாளர் நாயகத் திணைக்களத்தின் பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு (BMD) சான்றிதழ் வழங்கும் அமைப்பு, மாகாண மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் (மேல் மாகாணம் தவிர) இணையவழியிலான வருமான வரி அமைப்பு (eRL 2.0), பொலிஸ் திணைக்களத்தின் பொலிஸ் அனுமதிச் சான்றிதழ் அமைப்பு, வணிகத் திணைக்களத்தின் இணைவழியூடான நாட்டின் உற்பத்தி சான்றிதழ் வழங்கும் முறை, ஓய்வூதியத் திணைக்களத்தின் ஓய்வூதிய அமைப்பு, வளிமண்டலவியல் திணைக்களம், நிறுவனப் பதிவாளர் திணைக்களம் மற்றும் இலங்கையின் கணக்கியல் மற்றும் கணக்காய்வு தரநிலைகள் சபை உள்ளிட்ட பல நிறுவனங்களின் இணையத்தளங்கள் செயலிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *