ஏட்டுலா கனவாக்கத்தின் இரட்டை நூல் வெளியீடு
சிந்தனைத்திறன் மிக்க எழுத்தாளர்களின் புத்தகக் கனவை நனவாக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட #ஏட்டுலா கனவாக்கத்தின் அடுத்த
புத்தக வெளியீடாக,
எதிர்வரும் நவம்பர் மாதம் இரண்டாம் திகதி ஓட்டமாவடி மத்திய கல்லூரி பிரதான மண்டபத்தில் ஓட்டமாவடி பிரதேசத்தை சேர்ந்த இளம் எழுத்தாளர்களான பாத்திமா ஹகீமா அமீனுத்தீன் எழுதிய “என்னைத் தேடாதீர்கள்” மற்றும் அதீனா அபூ உபைதா எழுதிய “நிசப்த வியாக்கியானம்”
எனும் இரு கவிதை நூல்கள் வெளியீடு செய்ய இருப்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.
அல்ஹம்துலில்லாஹ்.
“இலக்கிய உலகில்
உலா வரக் காத்துநிற்கும்
படைப்புகளை கோர்த்து
புத்தகமாக்கும் ஓர் முயற்சி”
அடுத்த ஏட்டுலா, கனவை நோக்கிய பயணமிது

ஆஷிக் ஹுசைன்
பணிப்பாளர்
ஏட்டுலா கனவாக்கம்